18/04/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வின் தேச பத்தர்கள்...


பருக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு பஜ்ரங் தள் தலைவர் அறிவிப்பு...

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியான பரூக் அப்துல்லா சமீபத்தில் ஸ்ரீநகரில் வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகி உள்ளார்.

பரூக் அப்துல்லா பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கல்வீச்சாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் பரூக் அப்துல்லாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் கோவிந்த் பராஸ்கர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ரா மாவட்ட பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் கோவிந்த் பராஸ்கர் பேசுகையில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் உள்ளூர் மக்களால் தாக்கப்படிருப்பது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலாகும். இந்த சம்பவத்திற்கு பஜ்ரங் தள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கிறார். இது தேசத்துக்கு எதிரான செயலாகும், இதை எந்த நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என கூறிஉள்ளார்.

பரிசு அறிவித்தது மட்டுமின்றி பரூக் அப்துல்லாவிற்கு எதிராக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

பரூக் அப்துல்லாவை தேச விரோதியாக அறிவிக்க வேண்டும் என கூறிஉள்ளார் கோவிந்த் பராஸ்கர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.