19/04/2017

சித்தராவது எப்படி - 25...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஒன்று...

சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் அன்பர்கள் தங்கள் தேகம் பெற்றுக் கொண்ட ஆற்றலை சூட்சம தேக பயிற்சியின் மூலம் சேர்த்து வைக்கும் பயிற்சியை கற்று தரப் பட்டது..

ஆனால் மோன நிலையில் அதை மறந்து போகும் தருவாயில் அதிகமாக கிடைக்கப் பெற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் மிக முக்கியமான பகுதிகளின் வழியாக ஓட துவங்கும்..

அப்படி ஓட துவங்கும் அந்த ஆற்றல் ஒரு முறையில்லாமல் அதன் பயணப்பாதையில் எங்கோ ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கி எங்கே முடிவது எங்கே துவங்குவது என்று தடுமாறி கொண்டு இருக்கும்..

ஆகவே சூட்சம தேகத்தில் ஓடும் பாதையை, அதற்கு அடையாளம் காண்பித்து முறையான ஒரு ஓட்டத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...

இப்படி முறையான ஓட்டத்தின் மூலம் ஆற்றல் செல்லும் போது அது தேகத்தில் மையம் கொண்டுள்ள பஞ்ச பூத நிலைகளை, செம்மைப் படுத்தி முடிவாக பிரபஞ்ச ஆற்றலோடு கலக்க உதவி செய்யும்...

அப்படி ஒரு முறையான பாதையை அடையாளம் காணவே சில பகுதிகளை வெளியிட வேண்டிய அவசியம் ஆகிறது...

முதலில் அடையாளம் காட்டி சற்று பயிற்சி செய்தால் சுவாச ஒழுங்கு மூலம் பெறப்படும் ஆற்றல் அதன் வழியாக பாயத் தொடங்கும்..

அதன் வழியாக பாயும் போது என்னென்ன மாற்றங்கள் நம் பஞ்ச பூத நிலைகளில் ஏற்படும் என்பதையும் காணலாம்..

எச்சரிக்கை : சுவாச ஒழுங்கிலே பயின்று பக்குவப் படாதவர்களுக்கு இது பயன் படாது.. அதில் அதிகப் படியான ஆற்றலை பெறாதவர்களுக்கும் பயன் படாது..

பெற்ற ஆற்றலால் உடம்பில் முக்கியமாக தலையில் சில ஊரல்கள் உணர்வுகள் தோன்றியவர்களுக்கு மிகவும் பயன்படும்...

ஆறு ஆதார மையங்களில் முறையான முறையில் பயணப் படும் இந்த ஆற்றல் பத்து பயணப் பாதைகளை தேர்ந்தெடுத்து அதில் முறையாகப் பயணப் பட்டால் மட்டுமே மேன்மை அடைய முடியும்..

அந்த பத்துப் பயணப் பாதைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்..

முதல் மையமான மூல ஆதாரம் என்பது ஜல மல துவாரங்களுக்கு இடையில் உள்ளது..

இரண்டாவது மையம் தலையின் பின் பகுதியில் புருவ மத்திக்கு நேரே பிடரி என்ற இடத்தில் உள்ளது...

முதலில் இந்த இரண்டுக்குமான பயணப் பாதையை பயிற்சியின் மூலம் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்..

உள்நகைத்தல் என்ற பயிற்சியை சில வகுப்புகளில் கற்று தரப் பட்டது.. அதில் ஜீவ சக்தி மூல ஆதாரத்திலிருந்து தலைக்கு பயணப் படுவதை பெரும்பாலோர் உணர்ந்தனர்..

இப்பொழுது அந்த பயணம் மூல ஆதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகர்ந்து பிடரியை தொட வேண்டும்..

சுவாச ஒழுங்கில் சூரிய கலையாகிய வெளி மூச்சில் பிடரியிலிருந்து மூலாதாரத்தை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்...

சந்திர கலையாகிய உள்வாங்கும் மூச்சில் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணமாக ஆற்றலின் உணர்வு இருக்கும்..

இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது.. இது சுவாசத்திற்கு மிகவும் இயல்பானது.. மாற்றி செய்தால் பெரும் சிக்கல் ஆகி விடும்..

இது பத்து பயணப் பாதைகளில் முதல் பயணப் பாதை.. இதில் பூர்த்தி செய்த பின்பு தான் இரண்டாவது பயணப் பதையில் கால் எடுத்து வைக்க முடியும்...

இந்த மூலாதாரம், பிடரி என்பது என்ன வென்று பார்ப்போம்...

சுவாசம் சூரிய கலையில் தோன்றா நிலையில் இருக்கும் போது இந்த மூலாதார மையம் தான் பிரபஞ்ச ஆற்றலோடு இசைந்து இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெறுகிறது.. வேறு எந்த ஆதாரத்திற்கும் அந்த சக்தி கிடையாது..

புருவ மத்திக்கு அறவே கிடையாது.. புருவ மத்தியில் மூலாதார தொடர்பை துண்டித்து அளவிற்கு அதிகமான நேரம் பயிலும் பொழுது தேகத்தில் அதிக சோர்வு உண்டாகிறது..

சில குருமார்களின் பயிற்சிகளில் இந்த சோர்வு நிலைதான் உருவாகிறது.. இதனால் தேகம் மிக விரைவாக பழுது அடைகிறது..

உடலில் சூடு என்பது தேகத்தில் ஆற்றலின் குறைபாடே என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்...

முறையற்ற பயிற்சியில் சூடு சம்பந்தப் பட்ட வியாதிகளீல் அவதி படுவது எதனால் என்றால் பயிற்சியில் சுவாசத்தின் மூலமாக தோன்றா நிலை ஏற்படாமல் அதனால் நமது மூலதார மையம் அதனோடு இசைந்து பிரபஞ்ச ஆற்றலை ஒழுங்காக பெற முடியாமல் போவதால் தான்..

இந்த சாதாரண அதிமுக்கிய இரகசியத்தை ஒரு போதும் மறக்காமல் இருந்து பயின்றால் மட்டுமே அதிகப் படியான ஆற்றல் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கி நகரும்..

இந்த பிடரி என்பது நினைவகம்.. நான் யார் என்ற கேள்விக்கான பதிலை பல ஜென்மங்களின் அனுபவங்கள் வழியே ஊடுருவி பாய்ந்து பாய்ந்து அந்த பதிலுக்க்கான விளக்கங்களை விரித்துக் கொண்டே போகும்..

இந்த பிடரியை அடையாத ஆற்றல் இருந்தால் இரமணர் சொன்னது போல் நான் யார் என்ற கேள்விக்கான பதிலை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அறிந்து கொள்ள முடியாது...

பிடரி என்ற மையத்தை ஆற்றல் பூரணமாக அடையும் போது அந்த பதிலும் பூரணமாக கிடைக்கப் பெற்று பலம் வாய்ந்த இருப்பு தன்மையால் நாம் யார் என்ற கேள்விக்கான பதிலும் பூரணமாக கிடைக்கும்...

இந்த முதல் பயணப் பாதையில் இடைப்பட்ட சக்கரங்களை ஒன்று சேர செம்மை படுத்தப் படுவதால் தேகமும் முழுமையாக நலம் பெறுகிறது..

அந்த சக்கரங்களில் நாம் அதிகம் நாட்டம் கொள்ள தேவை இல்லை...

எந்த பயிற்சியாக இருந்தாலும் அது சுவாச ஒழுங்கின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.. இல்லையேல் எதுவும் பலனற்று போய் விடும்...

சித்தர் நிலை நோக்கி பயணிப்போமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.