ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள் நிறைய உள்ளன. அந்த குறிப்புகள் யாவும் இன்றைய 25-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெறக் கூடியவைகள் ஆகும்.
25-ம் தீர்க்க தரிசனம் நமது உலகங்கள் என பல உலகங்கள் நமக்கு உள்ளது என்றும், மனிதன் பூமியில் வாழ்வதற்கு முன் நட்சத்திர மண்டலத்தில் வாழ்ந்தவன் என்றும், அங்கு அவனுக்கு பூத உடல் என்ற அமைப்பு இல்லை என்றும், ஒளி உடலான ஆவி உடலோடு வாழ்ந்து வந்தான் என்றும், அதன் பின்னரே பூமியில் அவனுக்கென்ற ஒரு உடல் தோற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும், அந்த உடலுக்குள் வாழும் அவனின் ஒளிஉடலே (ஆத்மா) இன்றைய மனிதனின் முன்னோடி என்று 25-ம் தீர்க்க தரிசனம் அபூர்வமான ஒரு குறிப்பை வெளிப்படுத்துகின்றது.
இன்றைய விஞ்ஞானமும், மருத்துவ உலகமும் விடைகாண முடியாத ஒன்று, அதாவது மனிதஉடலுக்குள் உள்ள உயிர் மரணத்திற்கு பின் எங்கே செல்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரம் இல்லையென்றும் ஆனால் மரணத்திற்கு பின் மனிதனின் உயிர், ஆழ்மனச்சக்தி, ஆத்மா இவை மூன்றும் வேறு ஒரு உலகமான நட்சத்திர மண்டலத்திற்கு செல்கிறது என்றும்,
இதுவே இந்துமத கலாச்சாரத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறவி நட்சத்திரம் உண்டு என 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை தருகின்றது.
25-ம் தீர்க்க தரிசனக் குறிப்பின்படி இவ்வுலகம் மனித உயிர்களால் நிரப்பப்பட்டு உள்ளது என்றும், அந்த உயிரை தாங்கி உள்ள மனித உடலானது இப்பூமியில் வாழ தகுதி அற்ற ஒரு சூழல் ஏற்படும் நிலையே யுகமாற்றம் என்றும், அச்சமயத்தில் தான் மனிதகுலத்தை காக்க இறைவனே பூமிக்கு வரும் அரிய நிகழ்வு ஒன்று நடக்கும் என்றும், அத்தகைய அரிய அற்புதமான ஒரு நிகழ்வு தற்சமயம் நடைபெற போவதாகவும், அவர் வரும் இந்த யுகமே சத்திய யுகம் என்றும் சத்திய யுகமே மனித குலத்தை காப்பாற்றிட போகிறது என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
ஆகவே யுக மாற்றமான சத்திய யுகத்தின் வருகை நிகழ்வதற்கு முன்பாக உலகின் பல்வேறு பகுதியில் பல அழிவுகளும், பூமியின் மாறுதல்களும் (இயற்கை அழிவுகள்), மரண நிகழ்வின் காட்சிகளும் தொடர்ந்து ஏற்படும் என்றும், அச்சமயத்தில் அவைகள் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த நேரத்தில் அவர்கள் கடவுளிடம் முறையிடும் பல சம்பவங்கள் நிகழும் என்றும், அது மதத்தையும், கடவுளின் நிலைகளையும் தாண்டி பொதுவானதாக இருக்கும் என்றும், அச்சமயத்தில்தான் இந்த பூமியில் இறைவன் அவதாரம் கொள்வார் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
25-ம் தீர்க்க தரிசனம் நிகழும் சமயத்திற்கு முன்பாக இந்திய தேசத்தை நோக்கி உலக மக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்றும், அச்சமயத்தில் இந்தியா தனது வல்லரசுக்கான நிலையில் பயணத்தை மேற்கொண்டிருக்கும் என்றும், இது 2017-லிருந்து துவங்கி 2020க்குள் நிகழும் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை இங்கு தருகின்றது.
மக்களின் மனதில் இறைவன் பற்றிய சிந்தனை இக்காலகட்டத்தில் (2016 முதல் 2018க்குள்) மிக, மிக அதிகமாக காணப்படும் என்றும் அச்சமயத்தில் சீன தேசத்து புத்த மடாலயத்தில் ஒரு செய்திக் குறிப்பை அறிவிப்பார்கள் என்றும், அதனைக் கண்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே வியப்படையும் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மிக முக்கிய குறிப்பு ஒன்றை தெரிவிக்கின்றது.
போகரின் மாற்று பெயரே போகியாங்க் என்றும், அவரே மற்றொரு பிறவியில் டாமோ என்ற பெயரில் போதி தருமராக சீனாவில் இருந்தார் என்பதை அறியும் இந்திய தேசத்து மக்கள் மிகுந்த பெருமை கொள்வார்கள் என்று 25-ம் தீர்க்க தரிசனம் இங்கு நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.
இந்தியாவில் வேர் ஊன்றிய ஒரு கலையே இன்று Shaolin என்ற கலையாக உள்ளது என்றும், அதனை தோற்றுவித்த போதிதருமர் அந்த புத்த மடாலயத்தில் ஒரு இரகசிய அறையை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்றும், அது சீன அதிர்ஷட எண்ணாக கருதப்படும் 8-ம் எண் அறையின் அடிப்பகுதியில் உள்ளது என்றும், அதனை புத்த துறவிகள் கண்டறிந்து இந்திய கலையின் மகிமைகளையும், போதி தருமரின் உண்மையையும் அறிவிப்பார்கள் என்று 25-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை தருகின்றது...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.