01/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 47...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காண வேண்டிய தீர்க்க தரிசனம் 47 வது தீர்க்க தரிசனமாகும். இந்த 47 வது தீர்க்க தரிசனம் உலக வாழ்க்கையில் சந்தோஷங்களை வெறும் பணம் வடிவில் மட்டும் கண்டு வாழ்ந்து வரும் உலக பணக்காரர்களுக்கு போதாத காலம் என்று அறிவுறுத்துகிறது. அதாவது இந்த உலகத்தில் மற்றவர்களின் உழைப்பில் சொகுசாக வாழ்ந்து வரும் அத்தனை பணக்காரர்களும் தங்களுடைய வாழ்நாளை வாழ முடியாமல் போகும் தருணம் இக்காலமாக இருக்கும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

இந்த உலகத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள், முதலீட்டாளர்கள், சொகுசான வாழ்க்கையை வாழும் அரசு அதிகாரிகள் அத்தனை நபர்களுக்கும் இக்காலம் போதாத காலமாக இருக்கும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் சற்று விரிவாக குறிப்பிடுகின்றது.


மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பயங்கரமான அழிவுச்சம்பவம் ஒன்று தற்போது நிகழ உள்ளதாகவும், இதுவரை எவருமே எதிர்பாராத அளவிற்கு இச்சம்பவம் நடந்து முடியும் என்றும், இதனால் உலக மக்கள் அச்சத்திற்கு ஆளாக நேரிடும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இந்த பூலோகத்தில் மாபெரும் பூகம்பம் ஒன்று மத்திய ஆசியாவில் ஏற்படும் என்றும், இதனால் பூமியின் அடிதட்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்றும், இதனால் பூலோக அமைப்பில் பல மாற்றங்களும், அதிசய நிகழ்வுகள் கூட நடைபெறும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநில எல்லைகளில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், இதனால் நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திறகு ஆளாகுவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மத்திய அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும், அச்சமயத்தில் தமிழக அரசியலில் பல குழப்பங்களும், திடீர் திருப்பங்களும் ஏற்படும் என்றும், ஒரு நடிகரின் அரசியல் பிரவேசம் அப்பொழுது ஏற்படும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மாபெரும் புயல் ஒன்று கடலில் உருவாகி அந்நிய நாடுகளை மிரட்டப் போகிறது என்றும், இது இந்திய தேசத்திற்கு ஒரு மிக்க பலமாக அமையும் என்றும், இது கடவுளின் செயல் என்று நாட்டு மக்கள் பேசிக் கொள்வார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மெக்கா நகரில் மக்கள் கூடும் கூட்டத்தில் ஒரு மகா பாதகச் செயல் நடக்கும் என்றும், இது உலக முஸ்லீம் மக்களுக்கு போதாத காலம் என்பதை இறைவனார் அறிவுறுத்தி உள்ளார் என்று, உலக முஸ்லீம் மக்கள் தலைவர்கள் பேசிக் கொள்வார்கள் என்றும், அச்சமயத்தில் முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக பெற்றுள்ள ஒரு நாட்டில் குரானில் கூறப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம் மீண்டும் நடைபெறும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


7-ம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட போதிதருமரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காக சீன தேசத்து குங்ஃபூ குருமார்கள் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்திற்கு வருவார்கள் என்றும், அவர்கள் ஆய்வில் முக்கிய தடயம் ஒன்று கிடைக்கப் பெறும் என்றும், அதன் உண்மை விபரங்களை உலக மக்கள் அறியும் போது மிகுந்த மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் அடைவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. அது மட்டுமின்றி அந்த குருமார்களின் செய்தி குறிப்பில் இனி குங்ஃபூ கலை இந்திய தேசத்தில் மட்டுமே வளர்ச்சி பெறும் என்ற சிறப்பு செய்தியை வெளியிடுவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.


மண்ணனாக ஆண்டு மடிந்த இராஜாக்களில் ஒரு சிலரே உலகம் போற்றும் இறைச் சேவையை செய்து உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரான இராஜஇராஜ சோழனின் முக்கிய கல்வெட்டு ஒன்று தஞ்சை மண்ணில் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் இடம் பெற்றுள்ள சிற்பங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து உலகத்திற்கு ஒரு முக்கியச் செய்தியினை வெளியிடுவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.