01/05/2017

சிறுபான்மையினர் தொழில் துவங்க, கல்வி பயில கடன் உதவி , சென்னை கலெக்டர் அறிவிப்பு...


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், ஜெயின் மதத்தினர் தொழில் துவங்கவும் தொழில் கல்வி தொழில் நட்ப கல்வி பயிலவும் கடன் வழங்கப்படவுள்ளது.

கடன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மிகாமலும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

இக்கடனுதவி பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் இணைப் பதிவாளர்-கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியிலும் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, மேற்கூறிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

என சென்னை கெலக்டர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.