இதன் உண்மை சூட்சுமம் என்ன? இது பற்றிய ஒரு பார்வை...
சுடுகாடு என்பது உயிர் எனும் மெய் இருந்த கூடாகிய நம் உடலை விட்டு பிரிந்த பின் கூடு ஆகிய உடலை பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு.
அதாவது, உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம்.
உயிரற்ற உடல் பிணம் (சவம்).
60 – 70 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும் போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் நம் ஆன்மா பரிதவிக்கும்.
ஒரு ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு நாம் பிரியும் போது ஏற்படும் உணர்வு போல.... 60 – 70 ஆண்டு காலம் இருந்த கூடு தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்து பேணி காத்த உறவுகள் அனைவரும் நம் உடலை எரித்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விடும் போது.. இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்ற மெய்யை உணர்ந்து நமது ஆன்மா பரிதவிக்கும் போது..
மாபெரும் கருணை யாளன் எம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அந்நேரத்தில் நமக்கு அபயம் அளிக்கிறார்..
இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில்....
உற்றார் ஆருளரோ.. உயிர் கொண்டு.. போகும் பொழுது.. குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ..?
என்று மிக தெளிவாக கூறியுள்ளார்.
யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு நம் ஆன்மா பரிதவிக்கும் நேரத்தில்..
சிவன் மட்டுமே நமக்கு கருணையுடன் அடைக்கலம் தந்து நமக்கு அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று சிவனை கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணர்ந்து பாருங்கள்.
சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை..
அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன்..
நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி,
சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு காக்கிறான் என்பதே உண்மை.
இதை உணராதவர்கள் தான் வீண்பேச்சு பேசுகிறார்கள்.
மாபெரும் கருணையாளன் ஈசன்
கருணையை உணராமல் அல்லது மெய் உணராமல் இருப்பவர்கள்,
மெய் உணர வேண்டி ஈசன் திருவருளால் அடியார்கள் பாதம் பணிகிறேன்
சிவ சிவ....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.