06/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 62...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும்பகுதி 62-ம் பகுதியாகும். இந்த 62-ம் பகுதியானது பல்வேறு குறிப்புகளின் தொகுப்பாகும்.

அன்னை ஆதிசக்தியின் அவதாரப் பிரவேசம் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் என்பது 1000 ஆண்டுகளுக்கு (மனித கணக்கு) முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும், இதனால் தமிழகம் பல்வேறு சிறப்புகளை பெறக்கூடிய முன்னணி மாநிலமாக விளங்கும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. அன்னை ஆதிசக்தி அவதாரம் மேற்க்கொள்ளும் சேலம் மீண்டும் தனது வரலாற்று பெயரான சைலம் என மாறும் என 62-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.

அன்னை ஆதிசக்தியின் அவதாரத்தை காணவே பல்வேறு சித்தர்களும், இறைநிலை அம்சங்களும் சேலம் மாநகரத்தை சுற்றியுள்ள மலைகளிலும், குன்றுகளிலும் கோவில் கொண்டுள்ளனர் என்றும், இதுவே அன்னையின் மகத்தான சிறப்பு என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


சேலத்தை மையமாகக் கொண்ட ஒரு மலையின் அடிவாரத்தில்தான் அன்னை ஆதிசக்தியின் மகா பேராலயம் உருவாக்கப்படும் என்றும், அங்குதான் அன்னை உலகமாதாவாக காட்சி கொடுப்பார் என்றும் இறைநிலை குறிப்புகள் தெரிவிப்பதாக 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

அன்னை கோவில் கொள்ளும் அந்த மலையானது பூமி அதிர்வால் சிறிது பிளவுபட்டு இரண்டாக பிரியும் என்றும், அதனால் பூமியிலிருந்து பாதாள கங்கை ஒன்று திடீரென்று தோன்றி அது சேலம் பகுதியை வளமான பூமியாக மாற்றும் என்று மற்றொரு குறிப்பு 62-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பூமி அதிர்வானது சேலம் மலை அடிவாரத்திலிருந்து சேலத்தின் மையப்பகுதி வழியாக ஊடுருவி 3 ஆக பிரிந்து மேட்டூர் அணை வழியாக ஒகேனக்கல் வழியாக ஊடுருவி ஒரு நீர்வழிப்பாதையை சில இடங்களில் ஏற்படுத்தும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில விளக்கங்களை தருகிறது.


அன்னை ஆதிசக்தி மேற்கொள்ளும் அவதாரத்திற்கு என உருவாக்கப்படும் பேராலயம் உலகிலேயே உயரமானது  என்றும், இதன் கோபுரமே இனி ஒரு வரலாற்று சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசு துறைகளிலும் இடம் பெறும் என்று மற்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது.

சேலத்தை (சைலம்) மையமாகக் கொண்டு வருங்காலத்தில் தமிழக அரசு இயங்கும்படியான ஒரு இயற்கை சூழல் உருவாகும் என்றும், அதற்கு சென்னை கடல் உட்புகும் சம்பவமே காரணமாக அமையும் என்றும், சேலம் மாவட்டத்தோடு பிற மாவட்டங்களின் எல்லை அப்பொழுது இணைக்கப்படும் சம்பவம் உருவாகும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


அன்னையின் அவதாரம் அற்புதமான செயல் என்றும், பூலோகத்தை தேடி வரும் இறைவன், இறைவி அவரே என்றும், அவரின் கால் தடம் இப்பூமி எங்கும் தென்பட உள்ளது என்றும் 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சூரிய மண்டலத்தில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம் அன்னையின் பிரவேசம் பூமியில் நடப்பதற்கான அறிகுறியாக அது இருக்கும் என்றும், இதுவே நடைமுறையில் மிக, மிக, அருகில் உள்ள ஒரு நிகழ்வு என்றும் 62-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம் விரைவில் உருவாகப் போகின்றது என்றும், அது ஆதிசக்தியின் புதுக்காவியம் என்று 62-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை வெளிப்படுத்துகின்றது. இதுவே பின்னாளில் பல மதத்திற்கும் அரிச்சுவடியாக அமைய உள்ளதாக இறை தீர்க்க தரிசனங்கள் தெரிவிப்பதாக 62-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மூன்று மதங்கள் ஒன்றிணைந்து அன்னை ஆதிசக்தியின் அறிவிப்பை அமெரிக்க மாகாணத்திலிருந்து அறிவிப்பார்கள் என்றும், அன்றுதான் இதனைப் பற்றி விழிப்புணர்வு அனைத்து நாட்டு மக்களிடையே ஏற்படும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கருவூரார் என்ற சித்தரின் கல்வெட்டு ஒன்று திருச்சி மாநகரில் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் அன்னையின் அவதாரக் குறிப்புகளின் இரகசியங்கள் காணப்படும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

உலகப் புகழ்பெற்ற ஒரு இந்து ஆலயம் இச்சமயத்தில் இயற்கையின் சீற்றத்தால் தரையில் விழும் என்றும், இது அபசகுணம் அன்று என்றும், ஆனால் இப்பூமியில் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நடப்பதற்கான அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.