06/05/2017

பிராமணர்கள் மாட்டுக்கறி உண்டதற்கு ஆதாரம்...


மாட்டுக் கறி உண்பவர்கள் இந்துக்களே அல்ல என்றும், உயிரினத்தை வதைத்து நாக்கில் சுவைக்கும் ஈனப் பிறவிகள் அல்ல நாங்கள் என்றும் கூறிய மாண்புமிகு அதிமேதாவி பாஜக எச். ராஜா அவர்களுக்கான பதிவு...

H Raja அவர்களே சரி மாட்டுக் கறி உண்பவர்கள் இந்துக்களே அல்ல என்கிறீர்கள் சரி இதுவெல்லாம் எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது?

வேதகால பெரிய கடவுளான சிற்றின்ப பிரியனான இந்திரனுக்கு படைக்க எருதுகளின் இறைச்சி சமைக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் இப்படி குறிப்பிடுகிறது..

அவர்கள் எனக்காக பதினைந்து இருபது எருதுகளை சமைத்தார்கள்.. (ரிக்வேதம் X,86.14ab)

பசுமாட்டு காளைகளை இந்திரன் உண்டதாக (ரிக்வேதம் X.28.3.c) இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்திரனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொண்ட அக்னிக்கு எருதும், மலட்டுப் பசுவுமே அவனது உணவாக இருந்தன.. (ரிக்வேதம் VIII 43.11.)..

குதிரைகள்(அஸ்வம்), காளைகள் (ரிஷபம்), எருதுகள் (உக்ஷன்), மலட்டு பசுக்கள் (வசு), ஆட்டுக்கடா (மேஷம்) போன்றவை அக்னி தேவனுக்கு பலியாக தரப்பட்டது (ரிக்வேதம் X91. 14ab.)..

அக்னிக்குரிய பங்கான ஆட்டை எரிக்க வேண்டும்; தீயிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ள பசுவின் இறைச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. (ரிக்வேதம் X16.7ah.) மற்றும் (ரிக்வேதம் X.16.7ab.).

அது மட்டுமல்லாமல் வேத நூல்களிலும் வேத காலத்திற்கு பிந்தைய நூல்களிலும் கணிசமான இடங்களில் இறந்தோருக்காக பசுக்கள் கொல்லப்படுவதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது..

(ரிக்வேதம் X.16.7ab) அதில் ஓரிடத்தில் இறந்த உடலை மூடுவதற்குப் பசுவின் தோலும், கொழுப்பும் பயன்படுத்தப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளது..

(ரிக்வேதம் X.14-18) இறந்து போனவர் சொர்க்கத்திற்குப் பயணம் செய்ய அவரோடு ஒரு காளையும் எரிக்கப்பட்டது பற்றி அதர்வ வேதம் (XII. 248.) தெரிவிக்கிறது..

இறுதிச் சடங்கு நடத்தும் முறை குறித்து கிரக சூத்திரங்கள் விரிவாக வர்ணித்துள்ளன..

பிணத்தை எரிக்கும் போது பசு பலியிடப்பட்டது குறித்தும் அதன் பல்வேறு பாகங்கள் பிணத்தின் மீது வைக்கப்பட்டது குறித்தும் (கௌசிதக சூத்திரம்,81,20-9; அஸ்வாலயன் கிரக சூத்திரம்IV.3.19-21; கௌசிதக சூத்திரம்,V.2.13; V.3.1-5;) ஆகியவற்றில் மிகத் தெளிவாக குறிக்கபட்டுள்ளது அதிமேதாவி மாண்புமிகு முட்டாள் எச் ராஜா அவர்களே..

ஆக முந்தைய காலங்களில் இந்து மதத்தில் தான் அதிகளவு பசுக்களை வதைத்துள்ளனர், உனது வேத நூலே அதற்க்கு மாபெரும் சாட்சி.

ஆக இப்போ சொல் பசுக்களை சாப்பிடுபவன் இந்துக்கள் அல்ல என்றால் உனது வேத நூல்களை நீ புறக்கணிக்கத் தயாரா?

இஸ்லாமியன் பசுவை உண்கிறான் என்று எதிர்த்து அரசியல் செய்த நீங்கள் தற்போது சக இந்துக்களவே சாடுகிறாய் என்றால் இதுவே உங்களது ஆரிய பார்ப்பானுடைய மேலாதிக்க வெறி புத்தி என்பதை இம் மக்கள் புரிந்துக் கொள்ளட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.