இந்த மனுசக்கரவர்த்திக்கு 'சமன்" என்னும் புத்திரனும் 'ஈழம்" என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர்.
மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன.
ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.
எனினும் ஈழமண்டலமாகிய இலங்கையில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது.
இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது......மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
விசயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விசயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.......
சிங்கள இனத்தின் தோற்றம்
வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று.
சிங்கத்தில் இருந்து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் தமிழ் இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் தமிழினததை் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர்.
இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர். இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.
இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவர்கள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடு்த்து அவர்களது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.