மனித வாழ்வில் ஜனனம், மரணம் என்பது நியதி அது நிலைப்பு அடைந்தால் தான் உயிர்சமநிலை பெறும். மரணத்தை தாண்டிய வாழ்வு என்பது மனித சக்திக்கும் அப்பாற்பட்ட விடயம் என்று கூறப்பட்டது.
அதையும் இன்றைய மருத்துவ முறைகள் முறியடித்து வருகின்றன. இருதய மாற்று அறுவை சிகிச்சையில் தொடங்கி, தலை மாற்று அறுவை சிகிச்சை வரை பட்டியல் நீள்கிறது.
மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?
மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது?
என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது.
மரணம் விளிம்பில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது.
சோல்பிடிம்( Zolpidem) என்ற ஒருவகை மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
இது குறித்த சிக்கலான ஆய்வு தொடர்ந்து வருகின்றது. இப்போதைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்க கூடிய மருந்தை கண்டுபிடித்து உள்ளனர்.
இன்னும் பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றால் பல சிக்கலான ஆய்வை மேற்கொண்ட பிறகு தான் கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.