03/07/2017

நடிகர் சங்க பெயர் தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று மாறாதிருப்பது ஏன்?


இப்போது இருக்கும் பிலிம் சேம்பர் இடத்தை இனாமாக கொடுத்தவர் சேலம் மார்டன் தியேட்டர் உரிமையாளர் சுந்தரம் முதலியார் என்ற தமிழர் ஆவார்...

அதன் இன்றைய நில மதிப்பு சில நூறு கோடி அவர் அந்த இடத்தை வாங்கி கொடுக்கும் முன்பு சென்னை சினிமா என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்தது.

வாங்கி கொடுத்தவர் இது தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லவில்லை.

அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிக்கார்களும் கூடி செயல்படும் இடமாக பிறமொழியினர் பயன்படுத்திக் கொண்டனர்.

பின் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைத்தனர். அந்த நேரம் தமிழ் நாடு என்ற பெயரில்தான் இது இருக்க வேண்டுமென நம் தமிழர்களும் குரல் கொடுக்க தவறிவிட்டனர் மற்றுமொரு செய்தி நாற்பது ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று நடிகர் சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

அதன் பிறகு ஆந்திர நடிகர்கள் அவர்களுக்கு ஒரு சங்கத்தையும், மலையாளிகள் கன்னடர் என அவரவர்களுக்கு ஒரு சங்கத்தை அவர்களது மாநிலத்திலேயே உருவாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழ் நாடு நடிகர் சங்கம், தமிழ் நாடு திரைப்பட வர்த்தக சபை என்று பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக முன் வைத்து பாரதிராஜா போன்றவர்கள் ஆதரவுடன் இயக்குனர் பலாச்சந்தரை தலைவராக்கியுள்ளனர்.

தலைவர் பதவிக்கு வந்த கன்னட பார்ப்பனர் பாலச்சந்தர் தென்னிந்திய என்றே இருந்துவிட்டு போகட்டுமென விட்டுவிட்டார்.

அதனைத்தொடர்ந்து தென்னிந்திய என்ற பெயர் பலகையை தூக்கி எறிந்து அக் கட்டிட வளாகத்தில் போராட்டம் நடத்தினார் பாரதிராஜா..

ஆனால் இன்றுரை வந்தேறி கும்பல் பெயர் மாற்றவிடாமல் பல பிரச்சனைகளை உருவாக்கி விட்டு குளிர் காய்ந்துக் கொண்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.