அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம் பரபரப்பாக ஊடகங்களில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், எடப்பாடி அரசு நேற்று மட்டும் மூடப்பட்ட 1000 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் 500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி, பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்திருந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் இருந்த 2800 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் 1183 டாஸ் மாக் கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போது சில திருத்தங்களை செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நகரங்களின் இடையே அமைந்துள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்க கூடிய கடைகளை மூடச் சொல்லவில்லை எனவும், 20 ஆயிரத்துக்கும் குறைவாக மக்கள் தொகை இருக்க கூடிய பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மட்டுமே மூடினால் போதும் என்றும் அந்த திருத்தப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதிலும் 1000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மீனும் பழைய இடத்திலேயே நேற்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே 1103 டாஸ்மாக் கடைகள் இட மாற்றம் செய்யப்பட்டு மது விற்பனை செய்யப்படுகிறது.
பல கட்சியினரும், தமிழக பெண்களும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் மதுபான கடைகள் மூடப்பட்டன.
ஆனால், மாணவி அனிதாவின் தற்கொலையானது, பரபரப்பாக ஊடகங்களில் காட்டப்பட்டு, மக்கள் அனைவரும் திசைதிருப்பப்பட்டு, ஆயிரக்கணக்கான குடும்பங்களை காவு வாங்க போகும் டாஸ்மாக் கடைகளை சரியான நேரம் பார்த்து எடப்பாடி அரசு திறந்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.