03/09/2017

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...


சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...

1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
இருப்பினும் அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்பட வேண்டும்..

2. அந்நிய மதுபானம் தடை செய்யப்பட வேண்டும்

3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்பட வேண்டும்.

4. அவரவர் இல்லத்தில் மட்டுமே குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை வேண்டும்..

5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்பட வேண்டும்.

விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் தரவேண்டும். அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்பட வேண்டும்..

6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்பட வேண்டும்..

7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்..

8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்பட வேண்டும்..

9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள்  இருக்க வேண்டும்..

11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.