இன்னமும் துரோகம் தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...
நீட் தேர்வில் விலக்கு பெறாதது தமிழக அரசின் தவறு என்கிறார் மு. க. ஸ்டாலின்.
நீட் தேர்வு விலக்கு என்பது நமக்கு தேவையேயில்லை. நீட் தேர்வே தமிழகத்துக்கு தேவை இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு.
ஆனால் ஸ்டாலின் ஓராண்டு விலக்கு பற்றி பேசுகிறார். அதுதான் அவரால் முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்து இட்டு விட்டு வந்தவரே இந்த மு.க. ஸ்டாலின் தான்.
இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு, நீட் தேர்வு தேவை என்பது தான் மு.க. ஸ்டாலின் எண்ணம்.
அனிதாவின் தற்கொலையால் இப்படி பேச வேண்டிய நிலை அவருக்கு வந்திருக்கிறதே தவிர, நீட் தேர்வு தேவையே இல்லை என்று அவர் பேசாத தயாரக இல்லை.
இந்தாண்டு விலக்கு அளித்து அடுத்த ஆண்டு தேர்வு நடத்தினால் தற்கொலைகள் நிகழாதா...
மாநில பாடத்திட்டத்தில் தோல்வி அடைந்தாலே எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது நமக்கு தெரியாதா..
அனிதாவின் மரணத்தை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் மு.க. ஸ்டாலின்.
ஓராண்டு விலக்கு என்று பேசுவதன் மூலம், மேலும் நிகழக்கூடிய தற்கொலைகளை தனது அடுத்த ஆண்டு அரசியல் இலாபத்துக்காக அடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுகிறார் அவ்வளவு தான்.
நீட் தேர்வு விஷயத்தில் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும், கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும் முதல் துரோகிகள்...
குறிப்பு : தமிழக மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் நீட் தேர்விற்கு ஆதரவாக வழக்கு போட்டு தீர்ப்பு பெற்று தந்தது திமுக மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.