03/09/2017

தகுதிக்கு ஏற்ப அரசு வேலையாம் அனிதா குடும்பத்தில் ஒருவருக்கு - தமிழக எடப்பாடி அரசு...


உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீ முதலமைச்சராக  இருக்கிறாய், உன் தகுதி குறைவால் முதலமைச்சர் பதவிக்கே தகுதி குறைச்சல் ஏற்பட்டு இருக்கிறதே,.. அந்த முதலமைசார் பதவியை நீ அனிதாவின் அப்பாவுக்கு தந்து விடேன் பார்ப்போம் . உன்னைவிட அவர் நன்றாகவே ஆட்சி செய்வார்.

தகுதிமிக்க பெண்ணை வளர்த்து அவர் தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் இந்த் நாட்டு மக்களையும் நன்றாகவே ஆட்சி செய்வார்.

நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்று சொல்லும் ஆண்மை அவருக்கு நிச்சயம் இருக்கும். நீட் தேர்வை தமிழகத்தில் நடத்த விடமாட்டோம் என்று மத்திய அரசுக்கு நேரடியாக சொல்லும் ஆற்றல் அவருக்கு இருக்கும். உனக்கு தான் எந்தத் தகுதியும்  இல்லை.

ஒரு தகுதி உடைய பெண்ணை இழந்து விட்டோம் என்ற மனவேதனையில் இருக்கிறேன் என்கிறார் மு.க. ஸ்டாலின்  ஒரு கட்சிக்குத் தலைவராக  இருக்க மு.க. ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

கருணாநிதியின் மகன் என்கிற இயற்கை நிகழ்வை விட அவருக்கு என்ன தகுதி இருக்கிறது ?

உன்னை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக வைத்திருப்பதற்கு எங்களுக்குத்தான் மனவேதனை அதிகமாக இருக்கிறது.

அனிதா குடும்பத்தினருக்கு தகுதியான நட்ட ஈடு தரவேண்டும் இல்லையேல் மாபெரும்  போராட்டம் வெடிக்கும் என்கிறார் திருமாவளவன்.

அதாவது  துட்டு தரணும் என்கிறார் ஒரு மரணத்தை துட்டாகவும், துட்டமாகவும் பார்க்கும் அவலம் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு கட்சியை நடத்த..

தாழ்த்தப்பட்டவர் என்கிற தகுதியைத் தவிர என்ன தகுதி இருக்கிறது இவருக்கு...

அரசியல் செய்யவே தகுதி இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்கள் தகுதிக்கு மாணவர்கள் முதலில் தேர்வு வைக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.