24/09/2017

சித்தர் ஆவது எப்படி - 3...


சித்தத்தை சீர் செய்யும் முதல் படி-கனல் தன்மை அறிதல்..

சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..

சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...

இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..

இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்....

பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன... அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..

ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது..

இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுபவபடும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..

காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...

மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...

ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்..

அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும்,இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...

முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..

அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..

ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..

ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...

சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்.. அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..

இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது...

ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது.. உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...

இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..

எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்....

அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்.. தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..

சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்டபின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..

ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..

இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...

இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.