மியான்மர் நாட்டில் வசித்துவரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த மாதம் 25-ம் திகதியில் இருந்து கடந்த 8 ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் காக்ஸ் பஜார் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற முகாம் ஒன்றில் தங்கியிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குடிப்பதற்கு தண்ணீரும், உரிய சிகிச்சையும் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாத நிலையில், முகாமின் அருகிலேயே சடலத்தை எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.
ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடூரத்தின் தீவிரத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இந்த பரிதாப மரணம் இருக்கிறது என கூறப்படுகிறது.
மியான்மரில் நடக்கும் இனப்படுகொலைக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.