24/09/2017

தமிழன் என்றால் பயம்...


தமிழன் என்றால் ஏன் இந்த உலகத்தவர்க்கு இத்தனை ஏளனம்...?

காரணம் பயம்..

தமிழன் என்றால் பயம்..

தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வந்துவிட கூடாது என்ற பயம்..

தமிழன் விழித்துக்கொண்டால் இந்த உலகின் உண்மையான ஆன்மிகம் விழித்துக்கொள்ளும் என்கின்ற பயம்..

தமிழன் விழித்துக்கொண்டால் இந்திய அரசியல் ஒரு மிகப்பெரும் தலை கீழ் மாற்றத்தை அடையும் என்ற பயம்..

இந்த இந்திய நாட்டை ஆளப்போவது தமிழன் என்ற பயம்..

அதைத்தொடர்ந்து இந்த உலக அரசியலே இந்திய அரசியல் மாறியது போல தலைகீழாக மாறிவிடும் என்ற பயம்..

உலக நாகரீகத்தின் தாய்மடியாக இருந்த தமிழன் விழித்தால், இந்த உலகின் நவநாகரிக போதை என்கின்ற மாயை விலகும் என்ற பயம்..

இந்த உலகம் இப்போது பயணிக்கும் இலக்கு இல்லாத பாதையில் இருந்து மாற்றம்பெறும் என்கின்ற பயம், ..

எல்லோரும் சமம், எல்லாமும் சமம், எல்லோருக்கும் எல்லாமும் உரிமை என்ற கோட்பாடு உருவாகிவிடும் என்கின்ற பயம்....

தமிழன் விழித்துக்கொண்டால் இந்த உலகின் அழிவு சக்திகளுக்கும், அதிகார சக்திகளுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அழிவு என்ற பயம்..

தமிழர்களைப் போன்று அந்தந்த நாடுகளின் அந்தந்த நிலபகுதிகளின் பூர்வீக குடிகள் தற்போதைய இந்த உலக வல்லாதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிடும் என்ற பயம்..

இந்த உலகின் மூத்த குடியாகிய, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் குடியின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, நாகரீகம், கலாசாரம், அறிவியல், கலைகள், ஆன்மீகம் போன்றவை இந்த உலகம் முழுவதும பரவியுள்ளது என்கிற உண்மை வெளிவந்துவடும் என்கிற பயம்..

அப்படி தமிழர் வாழ்வியல் பரவிவிட்டால், இந்த உலகின் தற்போதைய பொருளாதார வேட்கை வெறி ஒழிந்துவிடும்..

எங்கு நோக்கினும் மக்கள் அமைதியாக சமாதானமாக ஒற்றுமையுடன் ஏற்ற தாழ்வு இல்லாமல், வறுமை இல்லாமல், சகோதர மனபான்மையுடன் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்ற தமிழ் சான்றோர்களின் வாக்கு மெய்யாகி வாழ்ந்து விடுவர் என்ற பயம்...

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகில் விஞ்ஞானம் அறிவியல் என்று கூறிக்கொண்டு இயற்கை விதிகளை மீறி இந்த உலகின் சம நிலையை கெடுத்து , பொருளாதாரம் முனேற்றம், விஞ்ஞான முன்னேற்றம், மக்கள் வாழ்வு முனேற்றம் என்று கூறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளுக்கே இந்த உலகம் அடிமையாய் இருப்பது மாறிவிடும் என்கின்ற பயம்...

ஆம். தமிழன் என்றால் பயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.