24/09/2017

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள செல்லப்பிள்ளை கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்று வரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு சிந்திக்கவும்..

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி, செல்லப்பிள்ளை செலுவ நாராயணா ஆகி, சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்த பெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்..

அவர்கள் இன்றும் தமிழராகத் தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது..

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின. ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்..

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்..

அதாவது வைணவ பார்ப்பனர்கள்.

அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்..

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே..

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது..

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது..

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.