29/09/2017

பொது வாக்கெடுப்பில் குர்திஸ்தான் வெற்றி...


தனி நாடாக தனித்த சிறப்புகளோடு உதயமாகின்றது.

91.83% வீதமான மக்கள், குர்திஸ்தான் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரித்து பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார்கள்.

குர்திஸ்தான் இன மக்களின் தனிநாட்டுப் போராட்டம், ஈழப் போராட்டத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

நிலம், மொழி, உரிமை, காலாசார அடையாளங்களுக்கான போராட்டம்.

வெற்றி தோல்விகளைக் கண்டு ஐம்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

தலைவர் பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிப் போராளிகள் மீதும்  குர்திஸ் போராளிகள் அன்பும் மதிப்பும் கொண்டவர்கள்.

சர்வதேச அரசியல்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

தற்போது அவர்கள் சந்தித்திருக்கும் ஈராக்கின் அச்சுறுத்தல் நெருக்கடியிலிருந்தும் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

அவர்களின் தனிநாட்டு போராட்டம், ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியது.

அத்துடன் ஈராக் என்ற கடும் போக்கான நாட்டில் நடைபெறும் அவர்களின் உறுதியான போராட்டம் நமக்கு பல வழிகளிலும் படிப்பினைகளையும் தரக்கூடியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.