29/09/2017

முருகனும் தமிழும்...


1. தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும்
அகலாத இளமையுடயவன்.

2. தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப்பெருமான் தோள்கள் பன்னிரெண்டே.

3. முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம் பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.

4. முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு. பிரணவ மந்திர எழுத்து ஆறு (ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. (வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).

5. முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து (ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து இருக்கும். இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.

6. முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு.

எனவே, முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல.. முருகனே தமிழ், தமிழே முருகன்.. ஓம் சரவணபவ...

குறிப்பு : திருப்பதியும் முருகன் கோவிலே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.