பரங்கி மலையில் ஆரம்பம்...
சென்னையில் இருக்கும் பரங்கிமலைக்கு (தூய தமிழில் 'புனித தோமையர் மலை', ஆங்கிலத்தில் 'செயின்ட் தாமஸ் மவுன்ட்') ஒரு சரித்திரப்புகழ் உண்டு.
134 படிக்கட்டுகளை கொண்ட இந்த மலையில், இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் நினைவாக ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
500 வருடங்களுக்கு மேலாக வழிப்படுதலமாக விளங்குகிறது.
200 வருடங்களுக்கு முன்பு ஆர்மீனிய வணிகர் ஒருவர் தனது சொந்தச் செலவில் இந்த மலைக்கு படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தார்.
இதற்கு இன்னொரு பெருமையும் உண்டு..
உலகில் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று கண்டு பிடிக்கப்பட்ட இந்திய 'சர்வே' பணிகள் இங்கிருந்து தான் தொடங்கின.
தி கிரேட் இந்தியன் ஆர்க் என்று அழைக்கப்படுகிற நில அளவை வேலையை கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் 1802ல் இங்கிருந்து தான் தொடங்கினார்.
ஆங்கிலேயர்கள் தங்களது வணிக நோக்கத்துக்காக இந்தியாவை அளக்க முற்பட்டார்கள்.
இந்தியாவின் பரப்பளவு, கடல் மட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஊரும் எவ்வளவு உயரமானது என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
இதற்காகவே ராபர்ட் கிளைவ், மேஜர் ஜேம்ஸ்ரென்னல் ஆகியோர் தலைமையில் இந்தியாவில் நிலத்தை சர்வே செய்யத் தொடங்கினார்கள்.
அப்போதுதான் "சர்வே ஆப் இந்தியா" தொடங்கப்பட்டது. அன்று கம்ப்யூட்டரோ, நவீன சாதனங்களோ கிடையாது. சர்வே வேலையும் சுலபமானது அல்ல. எல்லா குறிப்புகளும் அளவைகளும் காகிதத்தில் பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.
அப்போது சர்வே பணிக்காக தியோலைட் என்ற கருவி ஒன்று இருந்தது.
இதை இந்தியாவில் முதன்முதலில் பயன்படுத்தியவர் லாம்டன்தான்.
இதன் எடை 500 கிலோ.
இதைக் கொண்டுதான் பரங்கிமலையில் இருந்து தனது சர்வே பணியைத் தொடங்கினார்.
லாம்ப்டன் தனது சர்வே பணியைத் தொடங்கிய அடையாளமாக பரங்கிமலை மீது ஒரு சர்வே கல்லை நட்டு வைத்திருக்கிறார்கள்.
தேவாலயத்தின் கிழக்கு பகுதியில் இந்திய சர்வே துறையால் லாம்டனக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
அகன்ற பாரதத்தின் நிலத்தை சர்வே செய்யும் பனியின் தொடக்கம் இந்த பரங்கிமலைதான்.
இந்த அளவை வேலை 40 வருடங்களுக்கு மேலாக நடந்தது. அதற்குள் லாம்டன் இறந்து விட்டார்.
அதன்பின் தாமஸ் எவரஸ்ட் என்பவர் பணியை தொடர்ந்தார். அவர்தான். இமயமலை இருக்கும் சிகரம்தான் உலகிலேயே உயரமாது என்று உலகுக்கு முதன்முதலாக தெரியப்படுத்தினார்.
அதற்கு முன்பு வரை ஆண்டிஸ் மலைச் சிகரம்தான் உலகிலேயே உயரமானதாக கருதப்பட்டது.
தாமஸ் எவரஸ்ட் இந்த சிகரத்தை கண்டு பிடித்தால் தான் அவரது பெயரையே அந்த சிகரத்துக்கு வைத்து விட்டார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.