22/09/2017

மாட்டிறைச்சி விவகாரத்தில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்திர பிரதேசத்தில் கைது...


மாட்டிறைச்சிக்கும் தேசிய பாதுகாப்புக்கு என்ன சம்மந்தம்?

நம் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் செய்தி தாள்களை வாசிப்பதே இல்லையா?

 இந்த அரசின் முட்டால் தனங்களை , மக்கள் விரோத போக்குகளை தானாக வழக்கு பதிவு செய்து தடுக்கும் அதிகாரம் தான் அவர்களுக்கு இல்லையா? அவர்களை தவிர வேறு யாருக்கு அரசின் தவறுகளை சுட்டி காட்டி மக்களை காக்கும் அதிகாரம்  உள்ளது?

வழக்கு போட்டு 6 மாதம் காத்திருந்த பின் இவர்கள் மீது போடபட்ட தேச பாதுகாப்பு சட்டம் செல்லாது என நீங்கள் விடுவித்து என்ன பயன் ?

இந்த பீஜபி ஆட்சியில் நாடு  பின்னோக்கி நகர்கிறது. பிற்போக்கு தனம் அதிகரித்துள்ளது.

தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகளின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

பக்கத்து வீட்டில் எரியும் தீ நம் வீட்டுக்கு பரவும் முன் இந்த தீய சக்திகளை அரசியலிலிருந்து அப்புற படுத்தப்பட வேண்டியது நமது கடமை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.