சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைச்சேன். 10 ரூபாயே அதிகம்னு நினைக்கிறேன். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டிட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன்.
ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்.. (Dr.இராமசாமி).
செய்தி - விகடன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.