22/10/2017

தியானம்...



மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்..

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம்.

இதில் தியானம் என்பது ஒரு படி மேல்..

சக்கரங்கள்..

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.