நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன்.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக பாஜகவின் கொள்கைகள் எழுத்தளவிலும், செயல்களில் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன்.
எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஜெமிலா
பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்திதொடர்பாளர் சகோதரி Jemelaa - ஜெமிலா....
கட்சியில் இருந்து விலகினார்
இதற்கு அவர் சொல்லும் காரணம்
கிருஸ்தவ சிறுபான்மை சமூகமக்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணருகிறேன் என்கிறார்.
விஷம் என்று உணர்ந்து தெளிவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
சகோதரி ஜெமிலா அவர்களே...
இதை தான நாங்க தொண்டை தண்ணி வத்த சொல்லி கொண்டு இருக்கிறோம்.
சிறுபான்மை மக்கள் மட்டும் அல்ல. இந்துக்கள் உழைக்கும் நடுத்தரவர்க்கம் வியாபாரிகள் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் என யாருமே பயணிக்க முடியாது..
இது கார்ப்ரேட் முதலைகளுக்கான கட்சி மட்டுமே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.