27/10/2017

இஸ்ரேல் ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் யூரிகெல்லர்...


இவர் கூர்ந்து பார்த்தால் கரண்டி கத்தி ஸ்பூன் தட்டு போன்ற உலோகங்கள் எல்லாம் தானாகவே வளைய ஆரம்பித்தன.கெல்லரின் இந்த அதீத சக்தி விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராக இருந்தது.

 1973 ஆம் ஆண்டு பி.பி.சி ரேடியோவில் யூரிகெல்லரின் செயல் விளக்கங்களைப் பற்றி ஒலி பரப்பினார்கள் அப்போதே பல வீடுகளில் இரும்பு பொருட்கள் வளைவதாக போன்கள் அலறின. இதை நேரில் பார்காத சிலர் நம்ப மறுத்தனர்.

யூரிகெல்லர் பத்திரிக்கை வாயிலாக ஒரு அறிக்கை விட்டார் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி நான் பார்க்கிறேன் உங்கள் வீட்டில் டி.வி யின் முன்பாக பொருட்களை வைத்து சோதித்துப் பாருங்கள் என்றார்.

குறிப்பிட்ட அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள பலர் தம் வீட்டு டி.வி முன்பாக வேலைக்கு உதவாத கரண்டிகள், கத்திகள், லாடங்கள், இரும்பு பொருட்களை வைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் டி.வி யில் யூரிகெல்லர் தோன்றினார் கைகளை கட்டிக் கொண்டு ஏதோ பிரார்த்தனை செய்தவாறு உற்று  நோக்கினார்.

என்ன ஆச்சரியம் நாடு முழுவதிலும் டி.வி யின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வளைந்து சுருண்டன ஓடாத கடிகாரங்கள் ஓடின. சில வீடுகளில் டேபிள், சேர்கள் கூட வளைந்தன. அவரவர் வீட்டில் பொருட்கள் வளைந்ததாக எங்கும் இதே பேச்சு இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே யூரிகெல்லர் உலகப் புகழ்பெற்றவராகி விட்டார்.

கலிஃபோர்னியா மென்லே பார்க்கில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (S.I.R) கெல்லரை அழைத்தது அங்கு கெல்லருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

எல்லாவற்றிலும் கெல்லர் வெற்றி பெற்றார்.

எஸ்.ஐ.ஆர் நடத்திய சோதனைகளில் ஒன்று யாருக்கும் தெரியாமல் ஆறு படங்களை வரைந்து அதை ஒரு கவரில் போட்டு அதை ஒரு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டியை ஒரு லாக்கரில் வைத்து அந்த லாக்கரை பல மாடிகள் கொண்ட ஒரு அரையினுள் வைத்து பூட்டுக்கும் சீல் வைத்தனர்.

கெல்லரிடம் அந்த படங்களை வரைந்து காட்டுமாறு கேட்டனர் கெல்லர் மிக சரியாக அந்த படங்களை வரைந்து காட்டினார்.

விஞ்ஞானிகள் இதை ESP power என்றனர். கெல்லரோ என்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எண்னை இப்படி செய்விக்கிறது என்கிறார்.

ESP POWERக்கு ஒரு எல்லை உண்டு இந்த ஆற்றல் அதையும் மீறிய செயல் எனவே இது ஒரு அமானுஷ்ய சக்தியின் ஆற்றலாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.