33.6 கோடி புது 2000 ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்ட சேகர் ரெட்டி அந்த பணத்தை முறைகேடாக வங்கிகளில் இருந்து வாங்கியதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆகையால் இந்த பணம் அனைத்தும் தான் முறையாக சம்பாதித்து வரி கட்டியது என சேகர் ரெட்டி சொல்லும் கூற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்யும்.
மேலும் எத்தனை சேகர் ரெட்டிகள் தங்கள் கறுப்பு பணத்தை இவ்வாறு வெள்ளையாக மாற்றியுள்ளார்கள்?
இந்த திட்டத்தை கொண்டு வந்தவர்கள் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆதாயங்கள் என்ன?
இந்த திட்டத்தின் மூலம் கறுப்பு பணத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலமான நிலைக்கு கொண்டு செல்வோம் என்று சூளுரைத்தவர்கள் எங்கே?
இவர்கள் சொன்னதை நம்பி வங்கி வாசல்களிலும் ATM வாசல்களிலும் பல இன்னல்களை அனுபவித்த மக்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.
கறுப்பு பணம் வைத்திருந்தவர்கள் அனைவரும் இன்று தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றி உல்லாசமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் சிறு தொழில் செய்து பிழைத்த மக்கள் அடுத்து என்ன என்று தெரியாத நிலையில் வேலையை இழந்து எதிர்காலத்தை தொலைத்து செய்வதறியாது திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
Demonetisation அமல்படுத்தப்பட்ட நவம்பர் 8ம் தேதியை சிறப்பாக அனுசரிக்க தயாராகுங்கள்.
மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.