நான் தெரியாமல் தான் கேட்கிறேன் தமிழ்ப் பார்ப்பனரை ஏன் எல்லாரும் வெறுக்கிறீர்கள்?
அதென்ன எங்கு திரும்பினாலும் பார்ப்பான்
எதற்கெடுத்தாலும் பார்ப்பான்
எவனைக் கேட்டாலும் பார்ப்பான்.
அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் உங்களை?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தினானாம் பார்ப்பான், அவன் மனுதர்மம் என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எங்கே போனது அறிவு?
(மனுதர்மம் உருவாக்கியது திராவிடன் தான் தமிழன் இல்லை)
எந்த ஊர் சாதிக்கலவரத்தில் பார்ப்பான் துணைபோனான்;
சாதியைப் பார்ப்பன் ஏற்படுத்தினான் எப்படி சொல்கிறீர்கள்?
அந்தக்காலம் முதல் இன்றுவரை மக்களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனர்கள் இருக்கின்றனர்; தவிர உலகத்தில் அத்தனை மூலைகளிலும் நான்கடுக்கு சாதிகள் உள்ளன;
ஆன்மீகத்துடன் இணைந்துள்ள முதல் அடுக்கு, நிலத்தை ஆக்கிரமித்து காவல் மற்றும் படைத்துறையுடன் இணைந்த இரண்டாம் அடுக்கு,
கருவிகளைக் கொண்டு தொழில்செய்யும் மூன்றாம் அடுக்கு,
உடலுழைப்பை மட்டுமே கொண்டு பிழைக்கும் நான்காம் வகுப்பு;
உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது;
அதனால் இவை சரி என்று சொல்லவில்லை இவை ஒழிக்கப்படவேண்டியவையே;
தவிர நீங்கள் வாடிகன் தேவாலயத்திலும் மக்கா மசூதியிலும் கூட பிறப்பால் உயர்ந்தவரென்று அந்த அந்த மதப் பிராமணனைக் காணமுடியும்;
இத்தகையவர்களின் ஆதிக்கபலமும் ஒழிக்கப்பட வேண்டியதே;
பிராமணன் வேறு
பார்ப்பனன் வேறு
தமிழ்ப் பார்ப்பனர் உண்மையில் மற்றபகுதி பார்ப்பனரைப் போல் ஆண்டாண்டு காலம் அடக்கியாளும் சாதியினர் கிடையாது;
1300 வருடங்கள் முன்பு வேற்றின பிராமணர்கள் பல்லவர்கள் ஆட்சியில் இடம் பிடித்தனர் இதன் பிறகு சமசுக்கிருதம் மெல்ல மெல்ல தமிழ்ப் பார்ப்பனர் மீதும் திணிக்கப்பட்டு வேற்றினப் பிராமணருக்கும் தமிழ் பார்ப்பனருக்கும் கலப்பு நடந்து பிராமணர் பார்ப்பனரோடு பார்ப்பனராய் கலந்துவிட்டனர்;
700வருடங்கள் பிறகு தெலுங்கு -கன்னட அரசான விசயநகர ஆட்சியில் மீண்டும் வேற்றினப் பார்ப்பனர் நுழைந்து இன்னும் வலுவாக தமிழர் அனைவர் மீதும் சமசுக்கிருதம் திணிக்கப்பட்டது;
அதன்பிறகு 300 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் வந்து கிறித்துவத்தையும் ஆங்கிலத்தையும் திணித்தனர்;
இந்த மூன்று காலகட்டத்திலும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும் சமசுக்கிருதத்தை எதிர்த்தும் போராடியவர்களில் தமிழ்ப் பார்ப்பனர் பங்கு மறுக்க முடியாதது;
அதை போல வேற்றின ஆதிக்கத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழ்ப் பார்ப்பனரின் பங்கும் மறுக்கமுடியாதது;
ஏன் உங்கள் கண்களுக்கு நல்ல பார்ப்பனர்கள் தெரிவதேயில்லை?
தமிழுக்காகப் பாடுபட்ட பார்ப்பனர் உங்கள் கண்களுக்குத் தெரியவேயில்லையா?
ஆயிரம் ஆண்டுகள் முன்பு ராசராசனின் ஆட்சியில் பிராமண மற்றும் சமசுக்கிருத ஆதிக்கத்தை ஆராய்ந்து அலசிக் காயப்போடும் நீங்கள் 300வருடம் முன்பு வரை பிராமண மற்றும் சமசுக்கிருத பொற்காலமான விசயநகர ஆட்சியைப் பற்றி வாய்திறப்பதே இல்லையே ஏன்?
திராவிடப் பாசமா?
பார்ப்பனர் பேசும் தமிழின் மொழிநடை வேறுபட்டு இருக்கிறது என்றால் கோயம்புத்தூர் கவுண்டர்கள் தமிழும், நாகர்கோவில் மீனவர் தமிழும், சென்னை மீனவர் தமிழும், பாலக்காடு பார்ப்பனர் தமிழும் வெவ்வேறாக இருப்பதைக் கவனிக்கவில்லையா? என்றால் அவர்கள் தமிழர் இல்லையா?
ஓதும் தொழிலில் வலுக்கட்டாயமாக சமசுக்கிருதம் திணிக்கப்பட்டதால் ஓதும் பார்ப்பனர்கள் சமசுக்கிருதத்தைக் கற்கின்றனர்;
எல்லாப் பார்ப்பானும் சமசுக்கிருதம் கற்கிறான் என்று எவன் சொன்னான்?
கி.பி.700லிருந்து கி.பி.1300 வரை பிராமணருடன் இணைந்து ஆதிக்க சாதியாயிருந்த தமிழ்ப் பார்ப்பனர்,1300 களிலிருந்து 1900 வரை ஒடுக்கப்பட்டு அதன் பிறகு 1900க்கு பிறகு மீண்டும் தலைதூக்கினர்;
எப்படி என்றால் 1909ல் வந்த மிண்டோ - மார்லி சீர்திருத்தம் 1919ல் வந்த மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தம் மூலம் ஆங்கில அரசு இந்தியருக்கு விட்டுக் கொடுத்த அரசு பதவிகளில் தமது கல்வி மூலம் இடம் பெற்று மீண்டும் ஆதிக்க சக்தியாக வளர்ந்தனர்;
இன்று அவர்கள் மீண்டும் ஒடுக்கப்பட்டு ஐம்பதாண்டுகளில் வேற்றின வந்தேறிகள் அவர்களை விரட்டி விடும் நிலை வரவிருக்கிறது;
பார்ப்பனீயத்தை ஒழிக்கிறோம் என்று வந்தேறிகளை வாழவைக்கும் திராவிடத்துக்கு இடம்கொடுத்தோம்;
இருந்தாலும் இந்தப் பார்ப்பனர்களை செருப்பாலேயே அடிக்க வேண்டும்;
எவனோ ஒருவன் வந்து 'பார்ப்பானை ஒழி' என்று மற்ற தமிழரிடம் சொல்லும் போது நாங்களும் தமிழர் தான் என்ற வகையில் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாமல் முட்டாள்த் தனமாக ஆன்மீகம், இந்துத்துவம், சமசுக்கிருதம், ஆரியம் என்று வந்தேறிகளுக்குத் தோதுவான வழியிலேயே பயணித்து மற்ற தமிழருக்கும் எதிரியாகி வேற்றினப் பார்ப்பானோடும் இணைய முடியாமல் தமது பதவி பலத்தை இறுக பிடித்தபடி தனித்து நிற்கின்றனர்;
உங்கள் ஊரில் அக்கிரகாரம் இருந்தால் உற்றுக் கவனியுங்கள்...
அதில் இப்போது பாதிகூட பார்ப்பனர் இருக்கமாட்டார்கள்;
வந்தேறிகளும், ஆதிக்க சாதியாரும் பிராமணர்களை விரட்டி விட்டு அங்கே நிறைந்துவிட்டனர்;
பார்ப்பனரும் கல்வி கற்றுக் கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடிப்போவதையே விரும்ப ஆரம்பித்துவிட்டனர்;
காலில் செருப்பே போடாத, வெறும் தண்ணீரில் துவைத்து பழுப்போடிய ஒற்றை வேட்டியோடும் பூணூலோடும் ஓட்டை மிதிவண்டியில் கால்வாயடிப் பிள்ளையார் கோவிலுக்குப் பூசை செய்து சில்லறையை எண்ணிக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு ஏழைப் பார்ப்பானைக் கூடவா நீங்கள் பார்த்ததில்லை?
நான் தொடர்வண்டியில் பயணித்தபோது 'பார்ப்பனத் தமிழில்' பேசிக்கொண்டு வந்தார் ஒருவர்; சமசுக்கிருதத்தையும் கிருசுணனையும் புகழ்ந்துகொண்டே வந்தவர் திராவிடத்தையும் ஒருபிடி பிடித்தார்;
அவர் கிருட்ண பக்தியை வளர்க்கும் ISKCON இயக்கத்தைச் சேர்ந்தவராம்;
மதுரா என்றொரு இடம் டெல்லி அருகே உண்டு அங்கேதான் கிருட்ணன் பிறந்தாகக் கூறப்படுகிறது; அங்கே தொடர்வண்டி நிற்காவிட்டால் சங்கிலிப் பிடித்து இழுத்து விடுவாராம்; கிருட்ணன் பிறந்த இடமே இந்தியாவின் தலைநகரமாம்; ஒட்டுமொத்த இந்தியாவும் அனைவருக்கும் சொந்தமாம்; மொழிவாரியாக பிரியக்கூடாதாம்;
தமிழ்நாட்டில் தமது இயக்கத்துக்கு(?) எதிர்ப்பு இருக்கிறதாம்; அவரிடம் "நீங்கள் வீட்டிற்குள் என்னமொழி பேசுகிறீர்கள்" என்று கேட்டேன்; அவர் "தெலுங்கு" என்றார்; நான் "அதென்ன வந்து குடியேறிவர்கள் மட்டும் மதம், நாட்டுப்பற்று, மனிதநேயம் என்று மாநிலம் கடந்த விடயங்களை வலியுறுத்துகிறீர்கள்?" என்று கேட்டேன். உறைந்துபோய்விட்டார்;
வந்தேறிகள் பிராமணரிலும் ஆதிக்க சாதியிலும் தாழ்த்தப்பட்டோரிலும் கலந்து பல்லாயிரக்கணக்கான வருடங்களாக ஒரே இனமாக வாழும் மக்களை வெவ்வேறு திசையில் இழுக்கிறார்கள்;
அந்த வந்தேறிப் பிராமணன் சொன்ன ISKCON பற்றிக் கூறவா?
இது கிருட்ண பக்தியை பரப்பும் 'அமெரிக்க' நிறுவனம்; இவர்கள் வேலை என்னவென்றால் பிராமணர் போலக் குடுமிவைத்து காவியுடுத்தி நாமம் போட்டுக் கொண்டு கிருட்ணநாமம் கூட உச்சரிக்கவராத வெள்ளைக்காரர்களைக் கொண்டு, பல ஏக்கரில் சலவைக்கல் பதித்து வண்டிநிறுத்தும் இடத்துடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட ஆடம்பரமானக் கோவில்கட்டி அதில் வரும் காணிக்கையை அமெரிக்காவுக்கு வருமானமாக அனுப்புவது;
பெங்களூரில் இருக்கும் ISKCON கோவில் ஒன்று மட்டுமே colgate என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்து தந்த லாபத்தை விட மூன்று மடங்கு அமெரிக்காவுக்கு சம்பாதித்துத் தருகிறது;
பெங்களூரை விட பெரிய ISKCON கோவில் டெல்லியிலும் அதைவிடப் பெரிய கோவில் மும்பையிலும் அதைவிடப் பெரியது மதுராவிலும் உள்ளது;
எந்த விளம்பரமும் செய்யாமல் வருமானவரி விலக்குடன் இந்து, கிறித்தவ, இசுலாமிய கோயில்களைக் கட்டி காசுபார்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இப்போது போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.
மதம் என்பதே மக்களிடம் இருக்கும் இறை நம்பிக்கை மூலம் சிலர் சுரண்டிக் கொழுக்கத்தான் என்றாலும் இப்போது அது உலகளாவிய வியாபாரமாகிவிட்டது;
பிராமணன் பெயரைச் சொல்லி எவன் எவனோ பிழைக்கிறான்;
அதனால்தான் கூறுகிறேன் பார்ப்பனீயத்தை ஒழியுங்கள் ஆனால் பார்ப்பனர்களை அல்ல;
அவர்களும் இம்மண்ணின் மைந்தரே;
வேற்றினத்து பிராமணரை தமிழ்ப் பார்ப்பனருடன் குழப்பாதீர்கள்;
தமிழராக நாம் இணைவதற்கு எந்தக் காரணமும் குறுக்கே வரக்கூடாது.
தமிழா விழித்தெழு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.