21/11/2017

அதிர்ச்சி தகவல் - திருவாரூர் ருக்மணி மருத்துவமனையில் (R.R Hospital) நடந்த ஒரு மறைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அதன் விளைவாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலி...


16.11.2017 மாலை திருவாரூர் ருக்மணி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு தவறான அறுவை சிகிச்சை (worng Operation) செய்ததால் அவர் சுமார் 5 மணி அளவில் உயிர் இழந்துள்ளார்.

ஆனால் அதனை குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் அவரது உடலினை திருவாரூர் மருத்துவக்கல்லூரி க்கு கொண்டு செல்லப்பட்டு இரவு சுமார் 12 மணி வரை உயிர் இருப்பதை போன்று சினிமாவில் காட்டப்பட்ட விஜய்காந்த் யின் ரமணா பட பாணியில் நாடகம் நடத்தப்பட்டு இரவு 12 மணிக்கு மேல் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த பெண்ணின் உயிர் மாலை 5 மணிக்கே பிரிந்ததாக தகவல் தெரிகிறது...

மாலை 5 மணிக்கே உயிர் பிரிந்ததான தடயங்கள் அந்த குடும்பத்தாரிடம் கிடைத்தவுடன் அவர்கள் ருக்மணி மருத்துவமனையின் நிர்வாகத்திடம் முறையிட்ட போது ஆமாம் மாற்று அறுவைசிகிச்சை மூலமாக தான் அந்த பெண் உயிர் இழந்தார் ஆனால் இதைப்பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் இதற்கு நஷ்டஈடாக ரூபாய் 10,00,000 தருவதாக மருத்துவமனையில் சொல்லப்படுகிறது..

அந்த பெண் உயிர் இழப்பிற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை புரியவில்லை  இந்த ருக்மணி மருத்துவமனையின் மாற்று அறுவைசிகிச்சை கொலைக்கும்  (கொள்ளைக்கும்) திருவாரூர் மருத்துவக்கல்லூரி மற்றும் திருவாரூர் காவல்துறையினர் உதவி புரிந்துள்ளதாக கூறப்படுகிறது...

உயிரைக் காப்பாற்றும் மருத்துவமும் உதவவில்லை, நமக்கு காவலாக இருக்க உருவாக்கப்பட்ட காவல்துறையும் அந்த குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க உதவவில்லை...

எவ்வளவு தான் பணத்தை கொடுத்தாலும் அந்த பெண்ணின் குழந்தைக்கு ஒரு தாய் கிடைக்கக்குமா..
அவரது கணவருக்கு இவர் கொடுத்த பாசத்தை கொடுக்க இயலுமா... அந்த பெண்ணின் சகோதர சகோதரிக்கு அதே போன்று ஒரு சகோதரி கிடைக்க இயலுமா...?

பணம் இருந்தால் ஒரு தவறான செயலை எளிதாக மூடிமறைக்க முடிகிறது இந்த சமுதாயத்தில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.