21/11/2017

மஞ்சள் மருத்துவக் குணங்கள்...


நறுமண பொருட்களுடன் கலந்து உணவில் சேர்க்கப்படும் மஞ்சளின் மகத்துவம் அதிகமானது.

மஞ்சள் ஒரு நிலத்தடி வேர் ஆகும். இதன் வேரும், இலையும் நீண்ட நெடுங்காலமாக, பாரம்பரியமாக இந்தியா- சீனா மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மஞ்சளானது வலி நிவாரணியாகவும், கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும் இருக்கிறது.

ஜிஞ்சர் அல்லது ஜிஞ்சிபேரேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர் கர்கமா லாங்கா என்பதாகும். மஞ்சளில் ஆரோக்கியம் தரும் பலன் அதிகமாக இருக்கிறது. வலி நிவாரணியான இது, நுண்ணுயிர்களை அழிக்க வல்லது.

100 கிராம் மஞ்சளில் 1.80 மில்லி கிராம் பைரிடாக்சின் உள்ளது. இது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் அளவாகும். இந்த பைரிடாக்சின் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

புதிதாக பறிக்கப்பட்ட மஞ்சளில் வைட்டமின்-சி உள்ளது. தண்ணீரில் கரைக்கக்கூடிய வைட்டமின்-சி, சக்தி பெற்ற ஆன்டி ஆக்சிடன்ட்களையும், கிருமிகளையும் தடுக்க வல்லது.

மஞ்சளில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஷ், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் இருக்கின்றன.

இவற்றில் உடல் மற்றும் செல் திரவங்களில் முக்கிய அங்கம் வகிப்பது பொட்டாசியம். இது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.