இந்த காலத்திற்கு ஆங்கிலம் மட்டுமே போதும் என்று பெரும்பான்மையான தமிழர்கள் கருதி, தமிழை ஒதுக்கி வைத்து, தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பை அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே அழித்து கொண்டிருக்கிறார்கள்..
அதனால் தமிழகத்தில் தமிழ் மொழி அழியுது. அதே நேரத்தில் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி பயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது.
ஆனால் தமிழகத்தில் அழியும் தமிழ் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதை நான் சொல்லவில்லை அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நிறுவனமான என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது
Jun 30 2015, 9:10 am ET Tamil Language SchoolsOn the Rise in United States தமிழகத்தில் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது.
தமிழகத்தில் ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?
அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தமிழ் மீதான ஒரு வகையான அறுவருப்பு தமிழர்கள் மனதில் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது.
அதனால்தான் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மம்மி டாடி என்று சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறோம்.
ஆனால் அதே நேரத்தில் புலம் பெயர்ந்து ஆங்கிலம் பேச கூடிய நாடுகளில் வசிக்கும் மக்கள் தாய்மொழியின் அருமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர்
அது மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக அதிகம் இங்குள்ள குழந்தைகள் ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழக்த்தில் இருந்து வரும் ஆங்கிலம் அதிகம் தெரியாத தாத்தா பாட்டிகளிடையே பேசுவது கடினமாக உள்ளது.
தாத்தா பாட்டியை விரும்பாத குழந்தைகளே இல்லை. அதனால் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் தாங்கள் கற்றுதருவதைவிட ஏதாவது தமிழ் கற்றுக் கொடுக்கும் இடங்களில் படித்தால் மிக எளிதாக குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.
இதனால்தான் என்னவோ ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அநேக தமிழ் சங்கங்களும் அல்லது அங்குள்ள கோவில்களிலும் தமிழ் கற்று கொடுக்கப்படுகின்றன.
இப்படி கற்றுக் கொடுக்கும் குழுக்களில் 1998 ல் ஆரம்பிக்கபட்ட கலிபோர்னியா தமிழ் அகடமி மிக சிறந்த இடத்தை பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த பள்ளிகளில் தமிழ் பேசமட்டுமல்ல எழுத படிக்கவும் கற்று தருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இசை நடனம் நாடகம் போன்ற தமிழ் பண்பாட்டை போதிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து நடத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது..
California Tamil Academy was founded in 1998 in the Bay Area, and now has six branches, 40 affiliated schools http://www.catamilacademy.org/branches.html in 13 other states and two other countries, 5,500 students, and 700 volunteers including teachers and parents. California Tamil Academy provides academic and technical support to help those who want to start independent Tamil schools. Some public schools give students high school credit for studying Tamil at language schools.
இந்த நிலமை நீடித்தால் வருங்காலத்தில் தமிழகத்தில் வளரும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள அமெரிக்கா நோக்கி வந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை..
அது போல அமெரிக்கா குழந்தைகள் தண்ணி அடிக்க கற்றுக் கொள்ள தமிழகத்திற்கு தான் வர வேண்டி இருக்கும்... எப்படி ஒரு மாற்றம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.