05/11/2017

முடி அடர்த்தியா வளரணுமா?


வீட்டிலேயே இருக்கு அருமையான மருந்து..

இவ்வுலகில் தலைமுடி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்களே இருக்க முடியாது.

ஆனால், இன்றைய அவசரமான காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மிகுந்தளவில் மாசடைந்துள்ளது.

இதனால் ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை சந்தித்து, முடியின் அடர்த்தியை இழந்து இளம்வயதிலேயே வழுக்கை வந்துவிடுகிறது.

இதைத் தடுக்க பல ஹேர் லோசன்களை உபயோகப்படுத்தியும் பயனில்லாமல் மனமுடைந்து போயிருப்போம்.

ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு போடும் ஹேர் மாஸ்க்குகளில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு கிடைக்கிறதா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.

இயற்கை பொருட்கள் கொண்டு வீட்டிலேயே ஹேர் லோசன்கள் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்..

ஆரஞ்சு/எலுமிச்சை - 1
வாழைப்பழம் - 1
பால் -2 லிட்டர்
அலுமினியத்தாள்

செய்முறை..

எழுமிச்சை/ ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து கொண்டு வாழைப்பழம் மற்றும் பாலை அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, அரைத்து வைத்திருப்பதை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக 3 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, தலையில் அலுமினியத் தாளை சுற்றி குறைந்தது 30 நிமிடம் ஊற விட வேண்டும்.

30 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி குளிக்க வேண்டும்.

இவ்வாறு வாரம் 2 தடவை செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.