இந்த மூன்று பேருமே கெட்டவர்கள் தான்...
என்றாலும், இதில் அறவே புறக்கணிப்பட வேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.
மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.
எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றி கெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.
பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தார்.
அதன் பிறகு முடிவை மாற்றிக் கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்).
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.
மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள் தான்).
ஆனால், தினகரன் ஓரளவு வளைந்து கொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர், நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.
சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர். (சசிகலாவும் இதைப் போன்றவர் தான்).
அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.
இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்து போவதே முதல் விருப்பம்.
தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்து விட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டு விட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.