ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.
இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.
மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.
நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது.
இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால் தூய தேனைக் கண்டு பிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு..
1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.
2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.
தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.
மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.