16/11/2017

தமிழர் நிலம் கொள்ளை போவதை ரசித்துக் கொண்டிருந்த துரோகி கன்னடர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...


1956 சூலை மாதம் 27-ஆம் தேதி, 12 கோரிக்கைகளை முன்வைத்து, திரு சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார்.

அவரது முதல் கோரிக்கை: ஆந்திரத் தெலுங்கரிடம் இழந்த தமிழர் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

இரண்டாவது கோரிக்கை: சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.

அடுத்து, பல தமிழர் நலம் சார்ந்த கோரிக்கைகளை வைக்கிறார்.

1956 அக்தோபர் மாதம் 13 வரை உண்ணா நோன்பிருந்து சாகிறார்!

அந்த 78-நாளிலே, இவருடைய கோரிக்கையை ஆதரித்து, ‘ஆமாம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும் என்று கேட்டாரா?

சரி, சித்தூர் மாவட்டத்தையும், திருத்தணி மாவட்டத்தையும், திருக்காளத்தி மாவட்டத்தையும் - ஆக மூன்று மாவட்டங்களையும் ஆந்திராக்காரன் பிடுங்கிகிட்டுப் போயிட்டானே, இவர் கேட்கிறது நியாந்தான், திருப்பிக் கொடுங்கள் என்று சொன்னாரா?

அந்த 78-நாளும், உண்ணாநோன்புச் செய்தியை, ‘விடுதலை’ நாளிதழில் போட்டிருக்கிறாரா?

அந்த 78-நாளில் , இவரது (சங்கரலிங்கனார்) கோரிக்கையை ஆதரித்து ‘விடுதலை’யில் எழுதியுள்ளாரா?

அந்த 78-நாளில் அந்தச் செய்தியையாவது, ’இப்படி ஒருத்தர் உண்ணா நோன்பு இருக்கிறார்’ என்று வெளியிட்டுள்ளாரா? – செய்தியே கூடப் போடவில்லையே!

சங்கரலிங்கனார் இறந்ததையொட்டி
கலவரத்தில், பொதுவுடைமைக்கட்சி ஜீவானந்தம், இராமமூர்த்தி அடிபட்ட செய்திதான் வந்துள்ளதே தவிர..

இன்னார் இப்படி உண்ணாநோன்பு இருக்கிறார், அவரது கோரிக்கைகள் நியாயமானவை என்று ஆதரித்து ஒரு அறிக்கைகூட விடுதலையில் வெளியிடவில்லை;

ஆதரித்து வேண்டாம், ‘இப்படி ஒரு முட்டாள் தமிழன் உண்ணாநோன்பு இருக்கிறார்’ என்றாவது ஒரு செய்தியைக் கூட அவர் நாளிதழில் போடவில்லையே!

தமிழ்நாட்டில் தமிழனுடைய பணத்தை வாங்கிக் கொண்டு நாளிதழ் நடத்தின ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்த நியாயமான செய்தியைக் கூட போடவில்லையே!?

இவர் தான் தமிழருடைய தன்மானத்தைக் கட்டிக் காப்பாற்றியவரா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.