குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ‘எக்ஸ்’ என்ற சின்னம் பரவலாக வரையப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர்9, 14ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 180தொகுதிகளில் 150இடங்களில் வெற்றிபெற பாஜக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ஹார்த்திக் பட்டேல் ஆகியோர் பாஜகவின் இலக்குகளை முறியடிக்க தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், அகமதாபாத் நகரில் பல இடங்களில் எக்ஸ் என்ற குறியீடு வரையப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இக்குறியீடு இடம் பெற்றுள்ளது.
இந்துத்வா சமூகவிரோதிகள் பிரச்சனையை தூண்டும் வகையில் இதுபோல் எழுதியுள்ளார்களா என்று அப்பகுதி மக்கள் கலக்கம் கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் சதி என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதேபோன்று 2002 கலவரம் நடக்கும் முன்பு இஸ்லாமியர்களின் வீடுகள் அடையாளம் இடப்பட்டு சூரையாடப்பட்டன தீயிட்டு கொளுத்தபட்டன....
அதேபோன்று மீண்டும் சங்பரிவார் பயங்கரவாதிகள் தேர்தல் தோல்வியை பயந்து இந்துக்களின் ஓட்டை அறுவடை செய்ய முஸ்லிம்களை பலிகாடக்க முடிவு செய்துள்ளனரா என சந்தேகிக்கப்படுகிறது.
எதுவாயினும் இம்முறை பாஜக ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது வரலாறு ஆக குஜராத் இஸ்லாமியர்கள் தங்கள் உயிர் பொருள் அனைத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்... ஏன் என்றால் நடப்பது காவி வெறியர்களின் ஆட்சி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.