மேலாளர் பெயரிலேயே அறுபது ஏக்கர் என்றால் இன்னும் எங்கெங்கு என்னவெல்லாம் உள்ளதோ ?
ஆக கொடநாடு முழுமையும் இவர்கள் வாங்கி விட்டார்கள் என்றே அறிகிறோம்.
விலகுமா ஆறு பேரை காவு கொண்ட கொட நாடு எஸ்டேட் மர்மம்..
கடந்த 9-ம் தேதி நாடு முழுவதும் சசிகலா குடும்பத்தை குறிவைத்து 187 இடங்களில் சோதனையை துவக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்து விட்டார்கள்.
ஆனால் கோடநாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்றும் 6-வது நாளாக நீடிக்கிறது.
சோதனை துவங்கிய முதல் நாளன்று கோடநாடு எஸ்டேட்டிற்குள் சென்ற அதிகாரிகள் 2 மணி நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறினார்கள். அப்போது மேலாளர் நடராஜனையும் உடன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது தான் கோடநாட்டில் மற்றொரு இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டையும் ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்கியிருப்பது தெரிய வந்தது. எனவே அந்த எஸ்டேட்டில் தான் தொடர்ந்து சோதனையும், விசாரணையும் நடைபெற்று வருகிறது.
எஸ்டேட் மேனஜர் நடராஜனும் 60 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். குறிப்பாக கிரீன் டீ எஸ்டேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆவணத்தையும் சரி பார்த்து விசாரிக்க 4 மணி நேரம் எடுத்து கொள்வதால் கிரீன் டீ எஸ்டேட்டை பொறுத்த வரை, அங்கு விசாரணை நீடிக்கிறது.
கோடநாடு எஸ்டேட்டிற்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா சென்றால் அவர்கள் முன்னிலையில் தான் சில அறைகள் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த அறைகளை சல்லடை சல்லடையாக சோதனை போட்டு எல்லாவற்றையும் கண்டறிய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆனால் அவர்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. சுவற்றில் தங்க நகை அல்லது கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அதிகாரிகள் மத்தியில் உள்ளது.
இதனால் கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் பயன்படுத்திய அறையை சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுவர்களை ஸ்கேன் செய்யும் நவீன கருவிகளுடன் காத்திருக்கும் அதிகாரிகள், மேலிட அனுமதி கிடைத்தவுடன் சோதனையை துவக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்றும், எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மாதாந்திர வரவு செலவு ஆகியவை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது..
இது வரை ஜெயலலிதாவின் இரு ஓட்டுனர்கள் அவர்கள் நண்பர் மற்றும் அவரின் மனைவி , கொட நாடு எஸ்டேட் காவலாளி உள்ளிட்ட ஆறு பேரின் மர்ம மரணம் முடிச்சி அவிழாத நிலையில் ஜெயலலிதா சசிகலா தாங்கும் ரகசிய அறையில் கிடைக்க போவது என்ன வென்று பல்வேறு ஹாஸ்யங்கள் உலவுகிறது ..
கடந்த 25 ஆண்டுகளில் ஜெயலலிதா 15 வருட ஆட்சியில் எப்படி 20,000 கோடிக்கு மேல அசையா சொத்து வாங்கி குவித்தார்கள் என்ற ஆச்சிரியத்தில் வருமான வரி அதிகாரிகள் மலைத்து போய் உள்ளதாக தகவல்கள் கசிகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.