29/03/2018

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...


உப்பு சுத்தகரிப்பு நிலையத்தை தனியார் நிறுவனத்துக்கு தர எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு சுமார் ரூ.40 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலை அடுத்த மேலநீலிதநல்லூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் படுகாயமடைந்துள்ளார்.

பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்த மாணவர் பாலமுருகன் படுகாயமடடைந்தார்.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் அடுத்த ஐந்தாம் கட்டளையில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி பத்திரம் தயாரித்து ஏழரை சென்ட் நிலத்தை அபகரிக்க முயன்ற தந்தை வடிவேல், மகன் சேர்மதுரை ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி மகன் சரவணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மன நலம் பாதிக்கப்பட்ட சரவணன் தீக்குளித்தபடி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 கன அடியில் இருந்து 72 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.77 அடியாகவும், நீர் இருப்பு 11.96 டி.எம்.சி.யாகவும், நீர் வெளியேற்றம் 500 கனஅடியாகவும் உள்ளது.

பண்டிதன்பட்டியில் லாரியும், ஊழியர்கள் சென்ற பேருந்தும் மோதியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகன விபத்தில் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை - திருச்சி இரட்டை ரயில் பாதை பணி காரணமாக கடந்த 20 நாளாக நிறுத்தி வைக்கப்பட்ட சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை - திருச்சி, நெல்லை, கோவை ஜனசதாப்தி விரைவு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் சாஹித் ஹக்கான் அப்பாசியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஜான் கென்னடி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரிடம் சோதனை நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

மடத்துக்குளம் மெட்ராத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து சிறை வைத்துள்ளனர். விடிய, விடிய தேர்தல் அதிகாரிகளை திமுக எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் சிறை வைத்தனர்.

இரவிலும் போராட்டம் நீடித்த நிலையில் தேர்தலை ரத்து செய்வதாக கூறியதால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைகளில் வாடகை வசூல் செய்ய சென்ற பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பணியாளர் கண்ணன் என்பவரை தாக்கிய தங்கப்பனை கைது செய்யக் கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி 30-ந் தேதி முதல் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சரத்குமார் இன்று பங்கேற்கிறார்.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே சாலையில் பாலைக் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

சிறுவத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிகாரிகள் முறைகேடு செய்ததாகப் புகார்.

 பாஜக நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி டெல்லி விரைந்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்எல்ஏ ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

கோவையில் ரூ.32 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கியின் துணை மேலாளர் மித்தின் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுரிபாளையம் போலி கையெழுத்து போட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.