பொறாமை என்பது என்ன?
அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும்.
நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.
ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒப்பிட முடியாதவர்கள்.
நீ எப்போதும் நீதான். உன்னைப்போல யாரும் இல்லை. நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை.
கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார். நகல்களை அல்ல.
பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும். புல் பச்சையாகத் தெரியும். நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத் தெரியும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். இதே கதைதான் மற்றவர்களுக்கும்.
அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அவர்களுக்கு உன் வீட்டுப் புல் பச்சையாய்த் தெரியும். அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம். நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம். கீழ்த்தரமானவர்கள் ஆகி விடுகிறோம். எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம். எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.
நீ உனது உள் பக்கத்தை அறிவாய். ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய். அதுதான் பொறாமையை உருவாக்குகிறது.
யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை. நீ உனது உட்புறத்தில் வெறுமையை, மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய்.
அதே போல் தான் மற்றவர்களும்.
வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும்.
ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும். ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம்.
ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய்.
ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை. எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக, பகட்டாக ஆனால் எமாற்றுபவையாகக் கொண்டுள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.