25/03/2018

கானல் நீராகுமா காவிரி?


கடந்த 16.02.2018 அன்று காவிரி ஆற்று நீர்ச்சிக்கல் மேல்முறையீட்டு வழக்குகளின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு தம் தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் கொண்டு, காவிரியில் நமக்கு வரவேண்டிய நீரில் 15tmc  தண்ணீரை குறைத்துள்ளது மட்டுமின்றி, நதிகள் அனைத்தும் யாருக்கும் சொந்தமில்லை என்றொரு பூடகமான தீர்ப்பையும் வழங்கியுள்ளது. அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைத்திடுமாறும் கால நீட்டிப்பு வழங்கவியலாது என்றும் மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

தீர்ப்பு வெளியாகி ஏறத்தாழ 4 வாரங்களை கடந்துவிட்ட பொழுதும், நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு மத்தியல் ஆளும் பாஜக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை இழுத்தடித்து வருகிறது. தமிழக மக்களின், காவிரி டெல்டா விவசாயிகளின் பல வருடக் கனவாகிப்போன காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா ? அதன் பின்னால் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்து ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக நம்முடன் ஓய்வு பெற்ற தமிழ்நாடு பொதுப்பணித்துறை சிறப்பு முதன்மை பொறியாளர் அ. வீரப்பன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

அனைவரும் வருக...

காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவோம்..

நாள் : 24 மார்ச் 2018 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி.

இடம் : பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை.

தொடர்புகொள்ள : 9791016262.

ஒருங்கிணைப்பு : இளந்தமிழகம் இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.