09/04/2018

தறிகெட்டு ஓடிய அரசு பஸ் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் 40 பேர் உயிர் தப்பினர்...


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை 6 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதில் 40 பயணிகள் இருந்தனர்.

மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில், டிரான்ஸ்பார்மாரில் இருந்து கம்பிகள் உருகுலைந்த மொத்தமாக பஸ்சின் மீது விழுந்தது.

நல்ல நேரமாக அப்போது அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், பெரும் விபத்தில் இருந்து 40 பேர் உயிர் தப்பினர்.

டிரான்ஸ்பார்மர் மீது பஸ் பயங்கரமாக மோதியதில் 2 பெண்கள், டிரைவர் உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.