தனி மனிதன் – தனி மனித கூட்டு பங்களிப்பு கொண்ட சமுதாயம் என பல தளங்களிலும் இந்த கேள்வி மிக எளிதாகவே எழுந்து பிரதிபலிக்கும்.
நாம் நம் மனதில் உருவாக்கியிருக்கும் நம் சுய மதிப்பு உயரம் ( DETERMINATION OF SELF ESTEEM ) அதே அளவில் நாம் எதிர் நோக்கும் இடங்களில் கிடைத்து விடுவதில்லை.
அப்போது நம் மனதில் இந்த கேள்வி எழும்.
பொதுவாகவே மனித மன அமைப்பை இது போன்ற கேள்விகள் ஆக்கிரமித்தால் தொடர்ந்து ஊக்கமுடன் முன்னேறும் தன்மையை மனம் இழக்கும் என்பதால் இதை உளவியல் அணுகுமுறையோடு ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.
முதலில், முன்னேற்ற இலக்கு என எதை குறிப்பிடுகிறோம் ? என்பதை நாம் தெளிவுற நிர்ணயிக்கவேண்டும்.
ஏனென்றால், புற ஆசைகளால் உந்தப் பெற்று தானாகவே நம் மனதில் உருவாகும் கவர்ச்சி இலக்குகள் ( ARTIFICIAL ATTRACTED TARGET ) நோக்கி முயற்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை.
நம் திறன்களை சுமந்து சென்று சரியான இலக்கு நோக்கி பயணிக்கும் மனம் நமக்கு வசமானால் நம் இலக்கு எய்வது நமக்கு சுலபமாகும்.
வழக்கமான நம் தன்னம்பிக்கை புத்தகங்கள் இலக்கு நிர்ணயிப்பது – செயலாக்க விதிகள் – இறுதி இலக்கு அடையும் வழிகள் என நம்மை இலக்கு அடையும் இயந்திரம் போல பாவித்து கருத்து வடிவம் கொண்டு புத்தகங்கள் தயாரிப்பார்கள்.
அவர்கள் கூறும் விதிகள் படி நாம் பின்பற்ற ஆரம்பமாகும்போது நம் குடும்பத்திலிருந்தும் / சமூகத்திலிருந்தும் அந்நியப்படுவது போல் தோன்றும்.
காரணம், நம் தன்னம்பிக்கை புத்தக எழுத்தாளர்கள் அனைவரும் ஐரோப்பிய வாழ்வியல் அடிப்படை கொண்டு எழுதப்பட்ட சுய முன்னேற்ற நூல்களை நமக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
நம் சமூக / அரசியல் / தனிநபர் ஒழுக்க கள யதார்த்த அடிப்படைகளில் அந்த நூல்கள் அமைவதில்லை.
ஆனால், நம் இணைய கட்டுரைகள், நம் இலக்கு நோக்கி செல்லும் பாதையில் எங்கெல்லாம் கடும் சவால்கள் எதிர்கொள்ளும் என்பதை அடையாளம் காண உதவும்.
நகரின் சிறு கடையில் வேலை செய்வோருக்கும் – இந்த தேசத்தின் விஞ்ஞானிகளுக்கும் இலட்சியம் வெவ்வேறு திசைநோக்கி இருக்கலாம்.
ஆனால் அவைகளின் உயிர் மதிப்பீடு ஒன்று தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.