இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்தபோது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பதுபோல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது.
இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப் போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை.
புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.
கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியாய் தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.