19/05/2018

உன்னையும் என்னையும் போலத்தான் அவர்களும் இருந்தார்கள்...


நீயும் நானும் ஜல்லிக்கட்டு மாட்டுக்காக கூடினோம் அல்லவா..

அதே போல் அவர்கள் தங்கள் தாய் நாட்டுக்காக கூடினார்கள்..

நமக்கோ ஏழாவது நாளில் தான் அடி விழுந்தது...

அவர்களுக்கோ முதல் நாளில் தலையில் குண்டு விழுந்தது...

எப்படி நாம அடிவாங்கிய போது நமக்காக கேக்க நாதியற்று நின்னோமோ அப்படி தான் அவர்களும் நின்றார்கள்...

அப்பாவப்பட்ட கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் சீறினான் "அவர்களை திருப்பி அடிக்கோனம் "என்று... 14 வயதில் குண்டு வைக்க கற்றுக்கொண்டான் ,17 வயதில் துரோகிகளை களையெடுக்க ஆரம்பித்தான்...

அச்சிறுவனின் புகைப்படமோ , அடையாளங்களோ சிங்கள இரானுவத்திடம் இல்லை...

சிங்கள அரசு தமிழர் தேசம் முழுவதும் சுவரோட்டி அடித்தது "பிரபாகரன் தலைக்கு 10 லட்சம் சன்மானம்" என..

தமிழர் கூட்டமோ அந்த சுவரோட்டியை வேறு கோணத்தில் நோக்கியது பிரபாகரன் தலைக்கு என்பது பிரபாகரனே எம் தலைவர் என மாறியது....

அந்த ஒற்றை தலைவனின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் கூடியது...

புறநானூற்று வீரத்தை நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டியது விடுதலை புலிகள் சேனை....

ஜெனிவா ,கனடா,ஐரோப்பா நாடுகள் விடுதலைப்புலிகளை தமிழர் பிரதிநிதியாக அழைத்து பேசியது... அவர்கள் அங்கே தனியொரு நிழல் அரசாங்கத்தை நடத்திருந்தார்கள்...

திருடர்கள் இல்லாத தேசம் , பிச்சைகாரர்கள் இல்லாத தேசம் என ஓன்றை உருவாக்கினார்கள்...

அமெரிக்கா தமிழ் ஈழம் தனி நாடாக உருவாக்கி அதில் பிரபாபரனையே அதிபராக்கி, தமிழ் ஈழத்தின் உள்கட்டமைப்பிற்கு தேவையான அளவு பல மில்லியன் டாலர் பணவுதவியும் செய்து தருவதாக அமெரிக்கா தேசிய தலைவர் பிரபாகரனிடம் பேரம் பேசியது, ஆனால் ஒரு நிபர்தனை பிரபாகரனை திருகோணமலை துறைமுகத்தை 25 ஆண்டுகளுக்கு அமெரிக்க இராணுவ தளமாக பயன்படுத்தி கொள்ள குத்தகைக்கு கேட்டது.

(காரணம் பூகோள ரீதியாக தெற்காசிய பிராந்தியத்தில் திருகோணமலையில் ஏவுகணை தளம் அமைத்தால் ஈரானில் தொடங்கி பிலிப்பைன்ஸ் வரைக்கும் உள்ள அணைத்து நாடுகளையும் ஏவுகணை மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். அதிமுக்கியமாக திருகோணமலையில் இருந்து சீனா மற்றும் இந்தியாவின் மூலைமுடுக்கு என எந்த பகுதியை வேண்டுமானாலும் துள்ளியமாக தாக்குதல் நடத்த முடியும், உலகின் அதிக மக்கள் சக்தி வாய்ந்த இரு நாடுகளை கட்டுபடுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த திட்டத்தை முன்னெடுத்தது)

இதற்கு தலைவர் பிரபாகரன் உடன்படவில்லை.

அமெரிக்காவிடம் திருகோணமலை மட்டுமல்ல தமிழீழத்தில் தமிழர் நிலம் எதையும் அமெரிக்காவிற்கு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அதன் பின்பு சீனாவும் இதேபோல் திருகோணமலையை கேட்டது, தலைவர் பிரபாகரன் நிராகரித்தார்.

காரணம் அது தன் தந்தை தேசமான இந்தியாவிற்கும் தொப்புள் கொடியான தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் என நிராகரித்தார் பிரபாகரன்.

சர்வதேசத்துடனான முரண் மூண்டது சிங்களத்திற்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருந்தது ஐ.நா..

இறுதி போர் தொடங்கியது, 33 நாடுகள் ஒரு ஆதி இனத்தை அழிக்க உதவி புரிந்தது...

தங்கள் தந்தை நாடு என கருதிய இந்தியமோ ஓரு படி மேல் சென்று இராணுவ தளவாடங்களும் வீரர்களையும் சிங்களத்து தந்தது... அதற்கு துனையாக திராவிடம் நின்றது..

மே 16, 17, 18 _2009 போர் உக்கிரம் பெற்றது ...தடை செய்யப்பட்ட இராசயன குண்டுகள் தமிழ் மக்கள் மீது கொட்டப்பட்டது .... மூன்றே நாட்களில் 1750000 மேல் மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள்...

ஒரு இயக்கத்துக்கு எதிரான போர் என சொல்லி ஒரு இனத்தையே அழித்தி முடித்து விட்டனர்..

அழித்த சிங்கள இனம் அவன் தலைவனான இராஜபக்சே வை மூன்றே ஆண்டுகளில் தூக்கிவிசியது ....

அழிக்கப்பட்ட இனத்தின் தலைவனான பிரபாகரன் இன்றும் போற்றப்பட்டு கொண்டு தான் இருற்கிறார்கள்... ஆம்... அதுவே எம் இனம்.. கடைசி தமிழன் வாழும் வரை தமிழீழம் வாழும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.