காவிரி வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
மேலும் பருவமழை தொடங்கும் முன்பு வரைவு திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
புதிதாக உருவாக்கும் ஆணையம் தான் எல்லா அதிகாரமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அணை நீர் இருப்பு, நீர்வரத்து விவரங்களை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. மேலாண்மை வாரியத்துக்கு தண்ணீர் பகிர்வு அதிகாரத்தை தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 4 மாநில கருத்துக்களை கேட்ட பின் தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற குழு உத்தரவுப்படி கர்நாடகா நீர் விடவில்லையெனில் மேலாண்மை வாரியத்திடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்றும், மத்திய அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு: அணை நீர் இருப்பு தகவலை தெரிவிக்க மாட்டோம் என்ற கர்நாடக வாதம் நிராகரிக்கபப்ட்டது.
விவசாயிகள் வரவேற்பு: காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது வரவேற்கதக்கது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.