இந்த பிரபஞ்சத்தின் அங்கமான நாம் பஞ்சபூத தத்துவமான உடலை எடுத்துள்ளோம். அதன் பாதுகாவலனாக மனம் என்கிற தன்முனைப்பு இயக்கம் செயல்படுகிறது.
இந்த மனம் பல்வேறு பிறவிகளாக பரிணிமித்து ஒரு குடும்பமாக சேர்ந்து வாழ விரும்பியுள்ளது. எனவே நாம் கடந்த பிறவிகளின் உறவுகளோடே மறுபிறப்பு எடுக்கிறோம்.
ஆனால் அதே உறவு முறையில் பிறப்பதில்லை. கடந்த பிறவியில் எனக்கு அண்ணனாக இருந்தவர் தற்போது தந்தையாகவோ மகனாவோ நண்பனாகவோ இருக்கலாம்.
கடந்த பிறவியில் அவரை நான் எப்படி பாவித்தேன் என்பதில்தான் இன்றைய உறவுமுறையே அமையும். நான் யாரை எப்படி பாவித்தேனோ அப்படி.
சமீத்தில் நடைப்பெற்ற முற்பிறவி பற்றிய ஆய்வில் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஒரே சமூகமாகவோ பிறப்பெடுக்கிறோம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த பிறவியில் நாம் சந்திக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் கடந்த பிறவியில் பரிச்சயமானவர்களே. மனதின் செயல்பாடு அவ்வாறே அமைந்துள்ளது.
உங்கள் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த பிறவியில் நீங்கள் ஆசைப்பட்டதால் கிடைத்தவர்களே. ஆம் உங்கள் தாயாகட்டும் தந்தையாகட்டும் மகனாகட்டும் சகோதரராகட்டும் அனைவரும் உங்கள் ஆசையால் உண்டானவர்களே.
இப்பேற்பட்ட இந்த அற்புதமான உறவுகளை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்று நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தயவுசெய்து உறவுகளை நேசியுங்கள். நீங்கள் உதாசீனப் படுத்தினால் அடுத்த பிறப்பில் இவர்கள் வேறு எங்கோ பிறக்க நேரிடும். இந்த புனிதமான உறவு இயற்கை அருளிய வரம்.
யார் என்ன தவறுகளை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து மறந்து அன்போடு பழக கற்றுக் கொள்ளுங்கள். வாழ்கை என்பது எல்லையில்லா பேரறிவால் வழங்கப்பட்ட ஓர் மாபெரும் வரம். இது உங்கள் குடும்பம். தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான பதிவுதான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.