15/05/2018

ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...


ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை
என்றழைக்கப்படுபவர்..

இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.

இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.

இவரது பூர்வீகம்  கிரேக்கம் ....

இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.

தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.

பைபிள் சொல்ல கூடிய நோவா.
குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.

இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.

கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள
ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...

இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..

எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த
விஷயத்தையும் கூறுகிறார்..

அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..

அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..

ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...

இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.