மக்கள் நலனுக்காக மட்டுமே அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்று தனித்தனி திசையில் இயங்கும் சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், குழுக்கள், சிறு கட்சிகள் போன்றவை மக்களால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள், செயல்பாடுகள்,விதிமுறைகள் படி
ஒருங்கிணைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றை இயக்கத்தின் பெயரில் தேர்தலைச் சந்திக்க தயாரா....
மாற்றத்திற்கு ஏங்கும் லட்சக்கணக்கான மக்களை வலைதளத்தில் ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்தியலை உருவாக்கி அதை தேர்தல் வாக்குறுதியாக்கி நேரிடையாக மக்களிடம் செல்லத் தயாரா..??
ஒவ்வொரு கருத்தையும் மக்கள் மன்றம் முன் வைத்து (வலைதளம்) பெரும்பான்மை ஆதரவு பெற்ற (polling system) கருத்துகள் மட்டுமே செயல்பாட்டு வரைவில் இடம்பெறும்..
தலைமை என்ற ஓன்று இல்லை... நம் ஒருமித்த கருத்தியலை தலைமையாக ஏற்போம் .
எனில்.. சமூக வலைதளங்கள்,மீம் கிரியேட்டர்ஸ் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு முழு ஆதரவை அளிக்க நாங்கள் தயார்....
தேவைப்பட்டால் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்யத் தயார்...
நாம் அழிவின் விளிம்பில் நிற்கின்றோம் என்ற உண்மை நிலையையும்,மக்கள் நலன் ஒன்றே பிரதானம் என்பவர்களும் ஒன்றிணைய தயங்க மாட்டார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.