நமக்கு போதிதருமர் புத்த மதத்தில் இருந்தார் என்று தெரியும்.
ஆனால் புத்தமதத்தை அவர் எதிர்த்தது தெரியுமா?
ஏன் சீன தேசத்தில் பிரபலமான போதிதருமர் இங்கும் இலங்கையிலும் சொல்லப்படுகின்ற அளவுக்கு பிரபலம் ஆகவில்லை ?
புத்த மதம் அதன் ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று தூய வடிவில் இப்போது இல்லை.
இப்ப மட்டுமின்றி புத்தர் மரணித்த சில ஆண்டுகளில் புத்தரின் செல்வாக்கு கிடைத்த மரியாதை பலருக்கு தாமும் புத்தர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது .
அதனால் தான் வரலாற்றில் பல புத்தர் வந்தார்கள் .
மட்டுமின்றி பிற்காலத்தில் தான் புத்த மத வேதங்கள் மஹா வம்சம் முதற்கொண்டு உருவானது.
இன்றைய புத்தமதத்திற்கும் புத்தருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
புத்ததில் முக்கிய கொள்கையே சிலைவணக்கம் கூடாது .
இதனால் பிற்காலத்தில் நிறைய புத்த அறிஞர்களுக்கு கருத்துவேறுபாடு வந்தது.
பலர் கொள்கைகளை வகுத்துக் கொண்டனர்.
எந்தெந்த கொள்கை?
வரலாற்றில் எத்தனை புத்தர்கள் வந்தனர் என்றெல்லாம் என்னுடைய பழைய பதிவில் எழுதியுள்ளேன் பார்க்கலாம்.
அப்படி ஒரு தனி கொள்கை தான் #தியானமார்கம்.
புத்த மதத்தில் உள்ள ஒரு பிரிவு தியானமார்கம் .
புத்ததிற்கு நிறைய விடயங்களில் நேரடி மோதும் இந்த தியானமார்கம் பிரிவில் தான்.
போதிதருமர் இருந்துள்ளார். .
இப்போது புரிந்து இருக்கும் போதிதருமர் ஏன் இந்தியா இலங்கையில் கூறும்படி பிரபலம் ஆகவில்லை என்று. .
கூடுதல் தகவல்..
போதிதருமர் ஒரு தமிழர். இன்னும் நிறைய தமிழர்கள் போதிதருமர் காலகட்டத்தில் புத்ததில் இருந்துள்ளனர்.
அதில் முக்கியமானவர் , தஞ்சை தருமபால ஆசாரியர்.
போதிதருமர் அளவுக்கு கூட இவரைப்பற்றி யாரும் குறிப்பிடாமல் போனது பெரும் துயரம்.
இவரைப்பற்றி பேசுவோம் விரைவில்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.